ஒரு இன்ச் இங்க வர நினைச்சா கூட.. ராக்கெட் அட்டாக்தான்.. யோகி ஆதித்யநாத் எச்சரிப்பது யாரை தெரியுமா
லக்னோ: ஆப்கனில் ஆட்சியுள்ள தாலிபான்கள் இந்தியா மீது தாக்குதல் நடத்தால் நினைத்தால் கூட அவர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தத் தயாராக உள்ளதாக உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. அங்கு தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் 312 இடங்களில் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்தது. சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கூட்டணியால் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை..

கொரோனா பாதிப்பு
அதைத் தொடர்ந்து அம்மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு வரை உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது பெரியளவில் அதிருப்தி எதுவும் இல்லாமலேயே இருந்தது. இருப்பினும், இந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா 2ஆம் அலை நிலைமை அப்படியே புரட்டிப்போட்டது. கொரோனா பாதிப்பு உபி-இல் கையை மீறிச் சென்றது. கொரோனாவால் உயிரிழந்தோர் சடலங்களைக் கங்கை ஆற்றில் வீசிய அவலங்களும் அரங்கேறின.

யோகி ஆதித்யநாத்
இதனால் உபி பாஜக அரசு மீது. குறிப்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். அடுத்த ஆண்டு உபி-இல் தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜக தலைமை அதற்கு ஏற்ப காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது. கடும் அதிருப்தி காரணமாக உபி முதல்வர் மாற்றப்படலாம் என்று கூட செய்திகள் வெளியானது. பின்னர், யோகி ஆதித்யநாத்தே டெல்லி சென்றது எல்லாம் தனிக்கதை.

யோகி அட்டாக்
இதற்கிடையே யோகி ஆதித்யநாத் தனது பிரசாரத்தைச் சத்துமில்லாமல் தொடங்கிவிட்டார். சமாஜிக் பிரதிநிதி சம்மேளனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி பேசிய அவர், "இன்று, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் சர்வதேச அரங்கில் இந்தியா சக்தி வாய்ந்த நாடாக உருவெடுத்துள்ளது. இப்போது, எந்த நாட்டிற்கும் இந்தியாவை எதிர்க்கத் துணியவில்லை. இன்று, பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் தாலிபான்களால் உற்சாகமடைந்துள்ளனர்.

விமானத் தாக்குதல்
ஆனால் ஒன்றை மறந்துவிடாதீர்கள். இந்தியாவை நோக்கி தாலிபான்கள் தாக்குதல் நடத்த நினைத்தால் கூட அவர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்படும். இதற்கு அனைத்தும் தயாராக உள்ளது" என்றார். தொடர்ந்து எதிர்க்கட்சிகளைக் கடுமை சாடிய அவர், "இன்று, பஹ்ரைச் பகுதியில் சுஹேல்தேவ்க்கு நினைவிடம் கட்டப்படுகிறது. மேலும், அவர் பெயரில் மருத்துவமனையையும் தொடங்குகிறோம். இதைக் கண்டு எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றனர்.

வளர்ச்சி இல்லை
சுஹேல்தேவ் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறுவதன் மூலம் நம் மீது படையெடுத்த முகம்மது கோரி மற்றும் காஜியை மக்கள் மறந்துவிடுவார்கள் என எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றனர். இதன் மூலம் தங்கள் வாக்கு வங்கி பாதிக்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், மற்றும் காங்கிரஸ் கட்சிகளால் மாநிலத்தில் எந்தவொரு வளர்ச்சியை இல்லை" என அவர் சாடினார்.

தாலிபான் மனநிலை
மேலும் சமாஜ்வாதி கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல் யோகி ஆதித்யநாத், "ராமரின் பக்தர்களைக் கொன்றவர்களுக்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கத் தைரியம் இருக்கிறதா?" என்றும் கேள்வி எழுப்பினார். முன்னதாக மற்றொரு கூட்டத்தில் பேசிய அவர், அகிலேஷ் யாதவ் தாலிபான் மனநிலையைக் கொண்டவர் என்றும் இதனால் தான் அவரால் ஜின்னாவையும் வல்லபாய் பட்டேலையும் ஒரு இடத்தில் வைத்துப் பார்க்க முடிவதாகவும் சாடினார்.












Click it and Unblock the Notifications