உ.பி.யில் அடாவடி.. கன்னையா குமார் மீது ரசாயன மை வீச்சு.. பதறிப்போன காங்கிரஸ் தொண்டர்கள்
லக்னோ: உத்தரப்பிரதேச காங்கிரஸ் அலுவலகத்தில் கன்னையா குமார் மீது நேற்று மை வீசப்பட்டதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் மிக விரைவில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலங்களில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் 403 சட்டசபைத் தொகுதிகள் இருக்கின்றன. இதற்கான முதற்கட்ட தேர்தல் வரும் 10-ம் தேதி நடக்கிறது.
உத்தரபிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10ம் தேதி 11 மாவட்டங்களை உள்ளடக்கிய 58 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறதுஇந்நிலையில் ஆளும் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றன.

காங்கிரஸ்
இந்த உத்தரப்பிரதேச தேர்தலில், பிரியங்கா காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தேர்தலை சந்திக்கிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பெரிய அளவில் பிரசாரம் செய்து வருகிறார்கள். ஆனாலும் காங்கிரஸ் இந்த தேர்தலில் பெரிய வெற்றிகளைப் பெறாது என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வருகின்றன.

நட்சத்திர பேச்சாளர்
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட நட்சத்திர பேச்சாளர்கள் 30 பேர் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. முண்ணனி தலைவர்களுடன் மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், பூபிந்தர் சிங் ஹூடா, முன்னாள் எம்பி ராஜ் பப்பர், சச்சின் பைலட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.மேலும் இளம் தலைவர்கள் தீபிந்தர் சிங் ஹூடா, கன்னையா குமார் உள்ளிட்ட 30 பேரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

கன்னையா குமார்
ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிஹாரின் பெகுசராய் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட கன்னையா குமார் கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவரோடு குஜராத் எம்எல்ஏ-வுமான ஜிக்னேஷ் மேவானியும் காங்கிரசில் சேர்ந்தார். நாட்டைக் காப்பாற்றுவதற்காகத்தான் காங்கிரசில் இணைகிறேன் என்று கன்னையா குமார் தெரிவித்திருந்தார்.

மை வீச்சு
உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கன்னையா குமார் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தேவனேஷ் பாஜ்பாயி என்ற இளைஞர், அப்போது கன்னையாமீது ஆசிட் ஊற்றியதாக காங்கிரஸார் தெரிவித்தனர். உடனே தேவனேஷைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர் காங்கிரஸ் கட்சியினர். ஆனால் விசாரணையில் அது ரசாயனம் கலந்த மை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். போலீஸ் விசாரணையில் தேவனேஷ் எந்தக் கட்சியை சாராதவர் என்றும் சட்டக்கல்லூரி மாணவர் என்று தெரியவந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications