கடும் துப்பாக்கி சண்டை.. உத்தர பிரதேசத்தில் அடுத்த என்கவுன்ட்டர்..கேங்ஸ்டர் அனில் துஜானா சுட்டு கொலை
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் மாஜி எம்பி ஆதிக் அகமதுவின் மகன் என்கவுன்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக இன்று நடந்த பயங்கர துப்பாக்கி சண்டையில் மீண்டும் மீரட் நகரில் பிரபல கேங்ஸ்டரான அனில் துஜானாவை சிறப்பு அதிரடிப்படையினர் இன்று என்கவுன்ட்டரில் சுட்டு கொன்றனர்.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இங்கு தொடர்ந்து குற்றம் செய்பவர்கள் என்கவுன்ட்டர் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. கடந்த மாதம் கூட முன்னாள் எம்பியாக இருந்த ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத் அகமது என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

அதன்பிறகு சிறையில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் மர்மகும்பலால் சுட்டு கொல்லப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இரட்டை கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகன் ஆசாத் அகமது என்கவுன்ட்டர் செய்யப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் கொலை செய்யப்பட்டனர். இந்த பிரச்சனை இன்னும் முடியாத நிலையில் தற்போது இன்னொரு என்கவுன்ட்டர் நடந்துள்ளது. அதாவது உத்தர பிரதேசத்தில் கொலை, கொள்ளை, பணம் பறிப்பு உள்பட 60க்கும் அதிகமான வழக்குகளில் தொடர்புடையவர் அனில் துஜானா.
இவர் மீது டெல்லி, ஹரியானாவிலும் கூட வழக்குகள் உள்ளன. குறிப்பாக பொதுமக்களை மிரட்டில் பணம் பறித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட வழக்குகள் இவர் மீது ஏராளமாக நிலுவையில் இரந்தன. இந்நிலையில் தான் அனில் துஜானா வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் தான் கொலை வழக்கு ஒன்றில் தனக்கு எதிராக சாட்சி சொன்னவர்களை கொலை செய்வதாக அனில் துஜானா மிரட்டியுள்ளார். மேலும் கொலை செய்யவும் சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து அனில் துஜானை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.
இதற்கிடையே தான் இன்று முக்கிய தகவல் கிடைத்தது. அதாவது அனில் துஜான் மீரட் அருகே உள்ள கிராமத்தில் தனது கூட்டாளிகளுடன் பதுங்கி இருப்பதாக உத்தர பிரதேச மாநில போலீசாரின் சிறப்பு அதிரடி படையினருக்கு தகவல் சென்றது. இதையடுத்து சிறப்பு அதிரடி படையினர் அவரை கைது செய்ய சென்றனர். அப்போது அனில் துஜானா மற்றும் அவரது கூட்டாளிகள் அதிரடிப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதனால் போலீசாரும் தற்காப்புக்காக அந்த கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இறுதியில் இன்று அனில் துஜானாவை போலீசார் என்கவுன்ட்டர் செய்தனர். இதில் அவர் இறந்தார். உத்தர பிரதேசத்தில் கடந்த 2017 முதல் இதுவரை 160க்கும் அதிகமான என்கவுன்ட்டர்கள் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டி உள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் தான் அனில் துஜானா என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications