"கணவர் வேண்டாம்.. மாமியார் தான் வேண்டும்.. அவங்க கூட தான் வாழ்வேன்.." அடம்பிடிக்கும் இந்திய இளம்பெண்
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் கணவருடன் இருக்க விருப்பமில்லை எனக் கூறியுள்ளார்.. மாறாக மாமியாருடன் இருக்க விரும்புவதாகக் கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கணவன் மனைவிக்கு இடையே பல காரணங்களால் கருத்து வேறுபாடு ஏற்படும். அதுபோன்ற நேரங்களில் விவகாரத்துக் கூட வாங்குவார்கள். ஆனால், உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் வினோத சம்பவம் நடந்துள்ளது.

அதாவது அந்த பெண்ணுக்குத் தனது கணவருடன் வாழ விருப்பமில்லையாம்.. மாறாக மாமியாருடன் வாழ விரும்புவதாகச் சொல்லி அதிர்ச்சி கிளப்பியுள்ளது.
மருமகள் மீது புகார்: உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மருமகளிடம் இருந்து தன்னை காப்பாற்றுமாறு புகார் அளித்துள்ளார். தனது மருமகள் தனது மகனுடன் வாழ விருப்பமில்லை என சொல்லிக் கொண்டு தன்னை காதலிப்பதாக அந்த மாமியார் குற்றஞ்சாட்டியுள்ளார். உபி மாநிலம் புலந்த்ஷாஹரில் உள்ள சயனா பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள எஸ்.எஸ்.பி.யிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், "இரண்டு ஆண்டுகளுக்கு முன், எங்கள் ஒரே மகனுக்குத் திருமணத்தை நடத்தி வைத்தோம். இருப்பினும், எங்கள் மருமகள் வீட்டிற்கு வந்தவுடன் என்னைக் காதலிப்பதாகச் சொல்லி அதிர்ச்சி கொடுத்தார். என்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் எனத் தொடர்ந்து கூறி வலியுறுத்துகிறாள்.. என்னைக் காதலிப்பதாகச் சொல்லி வீடியோ எடுத்து அதை இணையத்திலும் வெளியிட்டார்.
காதல்: என்னைப் பார்த்தது முதலே என்னைக் காதலித்து வருவதாக அந்த பெண் கூறினார். ஊருக்காக மட்டுமே என் மகனைத் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவித்த அவள், உண்மையாக என்னுடன் மட்டுமே வாழ ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், என் கணவருடன் நான் சேர்ந்து வாழக்கூடாது என்றும் எனது மருமகள் மிரட்டுகிறாள். கேட்டால் நான் அவளுக்கு மட்டுமே சொந்தம் என்று கூறுகிறாள்.
எனது மருமகள் என்னுடன் வலுக்கட்டாயமாக நெருக்கமாக இருக்கவும் முயன்றார். அவள் தொடர்ந்து என்னை அச்சுறுத்தி வருகிறாள். அவளுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்தால் என்னை அடிப்பேன் என மிரட்டுகிறாள். எங்கள் இருவருக்கும் இடையே மாமியார் மற்றும் மருமகள் உறவு இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் அவள் மீது பாசமும் வைத்துள்ளேன். ஆனால், அதை அவர் வேறு மாதிரி பயன்படுத்த முயல்கிறாள்.
ஆபாச வீடியோ: இது தவறு எனக் கூறியபோது, அதெல்லாம் தவறு இல்லை என்று சொல்லி இதுபோன்ற ஆபாச காணொளிகளைக் காட்டுகிறாள்" என்று அவர் தனது மனுவில் கூறியுள்ளார். இதனால் தனது மகனுக்கு விவாகரத்து வாங்கி விடலாம் என்று கூட யோசித்து இருக்கிறார். இருப்பினும், விவாகரத்து என்று சொன்னாலே பதிலுக்கு வரதட்சணை புகார் அளிக்கப்போவதாக மருமகள் மிரட்டியுள்ளார்.
மகன் கண்ணீர்: இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் (புகார் அளித்தவரின் மகன்) கூறுகையில், "திருமணமான புதிதிலேயே அவர் இப்படிச் சொல்லிவிட்டார். என்னுடன் நடந்த திருமணத்தில் ஆர்வம் இல்லை என்று சொல்லிவிட்டார். என் தாயுடன் இருக்க விரும்புவதாகத் தொடர்ந்து கூறி வருகிறார். நான் இல்லை என்றாலும் எனது தாயுடன் இணைந்து வாழ வேண்டும் என கற்பனை செய்து வைத்து இருக்கிறார். நாங்கள் இதெல்லாம் தவறு என்றாலும் அதை அவள் கேட்பதாக இல்லை. எனது தாயிடம் இருந்து பிரித்தால் செத்துவிடுவேன் என மிரட்டுகிறாள்" என்றார்.












Click it and Unblock the Notifications