காட்டு ராஜ்ஜியம்.. உ.பி ஹோட்டல் பணிப்பெண் கூட்டு பலாத்காரம்.. இணையத்தில் வீடியோ வெளியானதால் ஷாக்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஹோட்டலில் பணிபுரியும் பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.
ஆக்ராவில் உள்ள ஹோம்ஸ்டே ஒன்றில் பணிபுரியும் 25 வயது பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மோசமாக தாக்கப்பட்டதாக உத்தர பிரதேச போலீஸார் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக ஒரு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பெண் பணிபுரிந்த ஹோம்ஸ்டேயில் கடந்த சனிக்கிழமை இரவு இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட ஆண்களில் ஒருவர்தான் அந்த பெண்ணை மிரட்டி இழுத்து சென்று கூட்டு பலாத்தகாரம் செய்து உள்ளார். தன்னுடைய ஆபாச வீடியோ ஒன்றை காட்டி, தன்னை மிரட்டி இப்படி இழுத்து சென்று பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் கூறினார்.
மேலும், அவர் மது அருந்த வற்புறுத்தப்பட்டதுடன், அவரது தலையில் கண்ணாடி மதுபாட்டில் உடைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கூட்டு பலாத்காரத்தின் போது தான் மோசமாக கொடுமை படுத்தப்பட்டதாக அந்த பெண் புகார் அளித்துள்ளார். தற்போது அந்த பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்.
காட்டு ராஜ்ஜியம்: உத்தர பிரதேசத்தில் சட்ட ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக புகார்கள் வைக்கப்படும் நிலையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பெண் ஒருவர் அறைக்குள் இழுத்துச் செல்லப்பட்ட வீடியோக்கள் தற்போது வெளியாகி உள்ளது. ஆண் ஒருவர் ஹோட்டல் பணியாளர்களுக்கு முன் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி அழைத்து செல்லும் வீடியோக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. அந்த பெண் உதவிக்காக கெஞ்சும் போது தாக்கப்படும் வீடியோக்கள் , கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டு பீர் பாட்டில்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோக்கள் கூட இணையத்தில் வெளியாகியுள்ளன.
தயவுசெய்து என்னை காப்பாற்றுங்கள்! என்று அந்த பெண் கத்துவதையும்.. ஒரு நபர் அவளை ஒரு அறைக்குள் இழுத்துச் செல்வதையும் வீடியோவில் பார்க்க முடியும்.
என்ன நடந்தது?: இது தொடர்பாக போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு பாதிக்கப்பட்டவரிடமிருந்து தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து அவர்கள் ஹோம்ஸ்டேக்கு விரைந்து சென்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
போலீஸ் உதவி கமிஷனர் (ஏசிபி) சதர் பிடிஐயிடம் கூறுகையில், "இந்த சம்பவம் தொடர்பாக நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். அந்த பெண், ஒன்றரை ஆண்டுகளாக ஹோம்ஸ்டேயில் பணிபுரிந்து வந்தார்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஜிதேந்திர ரத்தோர், ரவி ரத்தோர், மணீஷ் குமார் மற்றும் தேவ்கிஷோர் என அடையாளம் காணப்பட்டனர். பெண் ஒருவரும் இந்த குழுவில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சனிக்கிழமை நள்ளிரவில் உதவிக்காக அழுதபடி பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் ஹோம்ஸ்டேக்கு விரைந்து சென்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் வயது சுமார் 25 மற்றும் அவர் ஹோம்ஸ்டேயில்தான் வேலை செய்கிறார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications