Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவிற்கு இடியாக வந்து இறங்கிய அகிலேஷ் முடிவு! உ.பியில் தாமரை குலுங்க போகுது! போச்சு எல்லாம் போச்சு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் எடுத்த முடிவு ஒன்று பாஜகவை அதிர வைத்துள்ளது..

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். பாஜகவிற்கு இந்த லோக்சபா தேர்தல் கொஞ்சம் அப்படித்தான். ஓவர் கான்பிடன்ஸ் கொண்டு களத்தில் இறங்கிய பாஜகவிற்கு கொஞ்சம் பிரச்சாரத்திலும், தேர்தல் திட்டங்களிலும் அடுத்தடுத்து அடி விழ தொடங்கி உள்ளது.

Why Akhilesh Yadav decision to contest in Kannuj election is a big blow to BJP

அந்த வகையில்தான் பாஜகவின் கோட்டையான உத்தர பிரதேசத்திலேயே அந்த கட்சிக்கு சில கசப்பான தகவல்கள் வர தொடங்கி உள்ளன.

அதில் ஒன்று நேற்று திடீரென உத்தர பிரதேசத்தில் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் எடுத்த முடிவு ஒன்று.

என்ன முடிவு எடுத்தார்?: சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், லோக்சபா தேர்தலில் கன்னோஜ் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த தொகுதிக்கு மற்றொரு வேட்பாளரை அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு திடீரென சமாஜ்வாதி கட்சி அகிலேஷ் யாதவ் இங்கே போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளது. இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

இது உத்தர பிரதேசத்தில் மொத்தமாக அரசியல் நிலவரத்தையே மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக அங்கே "ஆலு பெல்ட்" என்று அழைக்கப்படும் உருளைக்கிழங்கு பெல்ட் முழுக்க பாஜகவிற்கு எதிராக திரும்பும் நிலை உள்ளது.

கன்னோஜ், ஃபிரோசாபாத், படவுன் மற்றும் மெயின்புரி உள்ளிட்ட 60% இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றும் சூழ்நிலை இதனால் ஏற்பட்டு உள்ளது. இந்த முடிவு ஆலு பெல்ட்டில் இருந்து பாஜகவை வெளியேற்றுவதை உறுதி செய்யும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது அங்கே உருளைக்கிழங்கு விவசாயிகள் அதிகம் உள்ள பெல்ட் ஆகும்,.

இன்று கன்னோஜ் தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கும் அகிலேஷ் யாதவ் தனது வேட்புமனுக்களை தாக்கல் செய்வார் என்று கட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும்படி சொல்வது என்றால்.. இப்போது முதல்வர் ஸ்டாலின் திடீரென சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

அது எந்த மாதிரியான அரசியல் மாற்றங்களை எல்லாம் ஏற்படுத்தும். மொத்த கொங்கு பெல்ட்டும் இதனால் திமுகவிற்கு சாதகமாக கூட மாறும் நிலை ஏற்படும். அப்படி ஒரு முடிவுதான் லோக்சபா தேர்தலில் அகிலேஷ் யாதவ் எடுத்துள்ள முடிவு.

பாஜகவிற்கு சிக்கல்: அங்கே அகிலேஷ் யாதவ் பிடிஏ என்ற அஸ்திரத்தை எடுத்துள்ளார். பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு எதிராக பிடிஏ என்ற அஸ்திரத்தை எடுத்துள்ளார். picchde (பிற்படுத்தப்பட்டவர்), Dalits (தலித்) மற்றும் alpsankhyak (மைனாரிட்டி) என்பதைதான் பிடிஏ என்கிறார். இந்த முழக்கத்தோடு அவர் கன்னோஜ் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

1998 - 2014 வரை கன்னோஜ் தொகுதி சமாஜ்வாதி இருந்த தொகுதி. கடந்த முறை இங்கே 2019ல் பாஜக வென்றது. அதற்கு முன் அகிலேஷ் - அவரின் அப்பா முலாயம், - அகிலேஷ் மனைவி டிம்பிள் என்று பலரும் வென்ற தொகுதி. இங்கேதான் தற்போது அகிலேஷ் யாதவ் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

உத்தர பிரதேச சிக்கல்; ஏற்கனவே உத்தர பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூடாது, பாஜகவை வீழ்த்த வாய்ப்புள்ள வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று அங்கே ராஜ்புத் உள்ளிட்ட சத்திரிய சாதியினரின் பஞ்சாயத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

முசாபர்நகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கேடா கிராமத்தில் நடைபெற்ற ராஜ்புத் சமூகத்தின் மகாபஞ்சாயத், உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள முதல்கட்ட பொதுத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தது. வேலையின்மை, அக்னிவீர் திட்டம் மற்றும் ராஜ்புத் சமாஜ் அவமதிப்பு போன்ற காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+