மோடி, அமித் ஷா.. யாரும் இதை எதிர்பார்த்தே இருக்க மாட்டாங்களே! காங்கிரஸ் அடித்த சிக்ஸர்.. ட்விஸ்ட்
லக்னோ: மக்களவைத் தேர்தலில் அமேதியில் இருந்து ராகுல் காந்தி மற்றும் ரேபரேலியில் இருந்து பிரியங்கா காந்தி வதேரா போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்ப்பு உள்ளது. காங்கிரசின் இந்த திடீர்திட்டம் பாஜகவிற்கு பெரிய அதிர்ச்சியாக மாறி உள்ளது.
மக்களவைத் தேர்தலில் அமேதி மற்றும் ரேபரேலி ராகுல் காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதிகள் ஆகும். இங்கே மீண்டும் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ராவை களமிறக்குமாறு உத்தரப் பிரதேச காங்கிரஸ் சனிக்கிழமையன்று காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைமையை வலியுறுத்தியது.

கடந்த வாரம் இதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆனால் காங்கிரஸ் தேர்தல் குழு (சிஇசி) கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தது.
அமேதி மற்றும் ரேபரேலியில் இருந்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேரா இருவருக்கும் டிக்கெட் வழங்க வேண்டும் என்று உ.பி.யில் கட்சி விவகாரங்களுக்கான ஏஐசிசி பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே மற்றும் மாநில சிஎல்பி தலைவர் ஆராதனா மிஸ்ரா ஆகியோர் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியிடம் வலியுறுத்தினர்.
கடந்த முறை ரேபரேலியில் சோனியா காந்தி 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார். இந்த முறை அவர் தேர்தலில் நிற்கவில்லை . இதனால் அங்கே பிரியங்கா காந்தி தற்போது களமிறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. அதேபோல் 2004, 2009, 2019 வரை ராகுல் காந்தி அமேதியில் வென்றார். கடந்த முறை இவர் ஸ்மிரிதி இராணியிடம் தோல்வி அடைந்தார்.
இந்திய நிலையில் இந்த முறை வயநாட்டில் மட்டுமே ராகுல் காந்தி போட்டியிடுவார்.. அமேதியில் போட்டியிட மாட்டார் என்று செய்திகள் வந்தன. ஆனால் அமேதியில் மீண்டும் அவரை களமிறக்க வேண்டும் என்ற உத்தரப் பிரதேச காங்கிரஸ் சனிக்கிழமையன்று காங்கிரசின் கட்சியின் உயர்மட்டத் தலைமையை வலியுறுத்தியது.
இறுதி முடிவு; மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற CEC கூட்டத்தில், இவர்கள் இருவரும் உத்தர பிரதேசத்தில் போட்டியிட வேண்டும். அப்படி செய்தால் தேர்தல் முடிவுகள் மாறும். இதற்கான முடிவை மல்லிகார்ஜுன கார்கேவிடம் விடுகிறோம் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாம். ராகுல் காந்தி அமேதியில் போட்டியிடுவாரா இல்லையா என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முடிவு எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டது.
இதனால் மக்களவைத் தேர்தலில் அமேதியில் இருந்து ராகுல் காந்தி மற்றும் ரேபரேலியில் இருந்து பிரியங்கா காந்தி வதேரா போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்ப்பு உள்ளது. இன்று இரவு இவர்களின் வேட்பாளர் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.
பாஜகவிற்கு பின்னடைவு; அங்கே இரண்டு தலைவர்களும் போட்டியிடுவதால் அது பாஜகவிற்கு பெரிய பின்னடைவாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவிற்கு வாக்கு ரீதியாக, அரசியல் ரீதியாக உத்தர பிரதேசத்தில் சவாலாக மாறலாம். அங்கே காங்கிரஸ் கட்சியின் எழுச்சியாக இது மாறும். முக்கியமாக அங்கே காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி இது மிகப்பெரிய அளவில் சாதகமாக மாறும்.
பாஜகவிற்கு சிக்கல்: சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், லோக்சபா தேர்தலில் கன்னோஜ் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த தொகுதிக்கு மற்றொரு வேட்பாளரை அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு திடீரென சமாஜ்வாதி கட்சி அகிலேஷ் யாதவ் இங்கே போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளது. இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார்.
இது உத்தர பிரதேசத்தில் மொத்தமாக அரசியல் நிலவரத்தையே மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக அங்கே "ஆலு பெல்ட்" என்று அழைக்கப்படும் உருளைக்கிழங்கு பெல்ட் முழுக்க பாஜகவிற்கு எதிராக திரும்பும் நிலை உள்ளது.
கன்னோஜ், ஃபிரோசாபாத், படவுன் மற்றும் மெயின்புரி உள்ளிட்ட 60% இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றும் சூழ்நிலை இதனால் ஏற்பட்டு உள்ளது. இந்த முடிவு ஆலு பெல்ட்டில் இருந்து பாஜகவை வெளியேற்றுவதை உறுதி செய்யும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது அங்கே உருளைக்கிழங்கு விவசாயிகள் அதிகம் உள்ள பெல்ட் ஆகும்,.
இன்று கன்னோஜ் தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கும் அகிலேஷ் யாதவ் தனது வேட்புமனுக்களை தாக்கல் செய்வார் என்று கட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும்படி சொல்வது என்றால்.. இப்போது முதல்வர் ஸ்டாலின் திடீரென சட்டசபை தேர்தலில் கோவையில் போட்டியிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
அது எந்த மாதிரியான அரசியல் மாற்றங்களை எல்லாம் ஏற்படுத்தும். மொத்த கொங்கு பெல்ட்டும் இதனால் திமுகவிற்கு சாதகமாக கூட மாறும் நிலை ஏற்படும். அப்படி ஒரு முடிவுதான் லோக்சபா தேர்தலில் அகிலேஷ் யாதவ் எடுத்துள்ள முடிவு.
பாஜகவிற்கு சிக்கல்: அங்கே அகிலேஷ் யாதவ் பிடிஏ என்ற அஸ்திரத்தை எடுத்துள்ளார். பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு எதிராக பிடிஏ என்ற அஸ்திரத்தை எடுத்துள்ளார். picchde (பிற்படுத்தப்பட்டவர்), Dalits (தலித்) மற்றும் alpsankhyak (மைனாரிட்டி) என்பதைதான் பிடிஏ என்கிறார். இந்த முழக்கத்தோடு அவர் கன்னோஜ் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
1998 - 2014 வரை கன்னோஜ் தொகுதி சமாஜ்வாதி இருந்த தொகுதி. கடந்த முறை இங்கே 2019ல் பாஜக வென்றது. அதற்கு முன் அகிலேஷ் - அவரின் அப்பா முலாயம், - அகிலேஷ் மனைவி டிம்பிள் என்று பலரும் வென்ற தொகுதி. இங்கேதான் தற்போது அகிலேஷ் யாதவ் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications