குடிசை பகுதிகளின் வளர்ச்சிக்கு 98 புதிய திட்டங்கள்! வறுமையில்லா உ.பியை உருவாக்க அதிரடி காட்டும் யோகி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ள குடிசை பகுதிகளை மேம்படுத்தவும், வளர்ச்சியடையாத பகுதிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும் 98 திட்டங்களுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில், குடிசை பகுதிகளை மேம்படுத்தவும், வளர்ச்சியடையாத பகுதிகளுக்கு கூடுதல் ஒதுக்கவும் நிதி 98 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். அதன்படி அம்ரோஹா மற்றும் தியோரியாவில் 28 வளர்ச்சித் திட்டங்களும், ஃபரூக்காபாத், அயோத்தி, மிர்சாபூர், பிலிபிட் மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களில் 70 திட்டங்களும் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின்படி வறுமை ஒழிப்புக்குதான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 75 சதவிகிதம் விடுவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், உத்தரப் பிரதேசம் எல்லாவற்றிலும் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்பதே முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கனவு. அதற்காகத்தான் இவ்வளவு திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் கடந்த காலத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு என்பது மிகுந்த கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் தற்போது பெரும்பாலான இளைஞர்களுக்கு வேலை கிடைத்திருக்கிறது. இது மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் உயர்த்தும். விரைவில் உத்தரப் பிரதேசம் அனைத்து துறைகளிலும் தேசிய அளவில் முதன்மை மாநிலமாக வரும்" என்று கூறியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications