உ.பி போக்குவரத்து கழகத்தில் புதிய மாற்றம்! மிளிரும் பெண்களின் வாழ்வாதாரம்.. யோகி ஆதித்யநாத் அசத்தல்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்படும் 51 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்படும் பேருந்து சேவையை அவர் தொடங்கி வைத்திருக்கிறார்.

யோகி ஆதித்யநாத், கடந்த இரு நாட்களாக அயோத்தியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை புதியதாக தொடங்கி வைத்துள்ளார். அதேபோல முடிவுற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். இந்நிலையில், நேற்று அயோத்தியின் ராம் கதா பூங்காவில் இருந்து "மிஷன் மகிளா சாரதி" எனும் பெண்கள் மட்டுமே இயக்கும் 51 பேருந்துகளை அவர் தொடங்கி வைத்திருக்கிறார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு சமூகத்தின் அனைத்து விதமான வளர்ச்சிக்கும் பெண்களின் முன்னேற்றம் முக்கியம், பெண்களை மதிக்க வேண்டும் மற்றும் அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச போக்குவரத்து கழகத்தின் கீழ் இந்த 51 பேருந்துகளும் இயக்கப்படும். இந்த பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் என இருவரும் பெண்களாகதான் இருப்பார்கள். பெண்களால், ஆண்கள் செய்யும் வேலைகளை செய்ய முடியாது என்று கூறியவர்களுக்கு மிஷன் மகிளா சாரதி திட்டம் நல்ல பதிலடியை கொடுத்திருப்பதாக யோகி கூறியுள்ளார். ஏற்கெனவே உத்தரப் பிரதேசத்தில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 1.5 பெண்களுக்கு மாநில அரசு வேலை வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications