சாமானிய மக்களின் பிரச்னைகளுக்கு உடனே தீர்வு காணுங்கள்.. அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவு
லக்னோ: பொதுமக்களின் குறைகளுக்கு உடனடி தீர்வு காண்பதில் அதிகாரிகள் முழுவீச்சில் செயல்பட வேண்டும் என்றும், தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி அதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தை 1 டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்தவும், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியான மாநிலமாக மாற்றவும் யோகி ஆதித்யநா்த அரசு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், சாமானிய மக்களின் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காண்பதன் மூலம் உத்தரப் பிரதேசத்தின் தரம் மேலும் உயரும் என்று அவர் கூறியுள்ளார். அதற்காக கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு என 10 துறைகளை மேம்படுத்த துறை சார்ந்த அதிகாரிகளிடம் விரிவான திட்டத்தையும் கேட்டிருக்கிறார்.

எதிர்வரும் 2025ம் ஆண்டுக்குள் இதனை சாத்தியப்படுத்த இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதேபோல சமீபத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதில் பல சமூக திட்டங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக இந்த பட்ஜெட்டுக்கு முன்னெப்போதை விடவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இப்படி பல்வேறு பாசிடிவ் சம்பவங்களை செய்து வரும் யோகி ஆதித்யநாத் அதன் தொடர்ச்சியாக தற்போது அதிரடி உத்தரவை போட்டுள்ளார். அதாவது, "முதலமைச்சரின் தனி பிரிக்கு வரும் புகார்கள், குறை கடிதங்கள் அனைத்தும் கவனமாக பரிசீலிக்கப்பட்டு அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக மருத்துவ சிகிச்சைக்கான உதவி கோரி வருபவர்கள், நில ஆக்கிரமிப்பு பிரச்னைக்காக வருபவர்களின் குறைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்.
மாநிலத்தின் எந்த பகுதியிலிருந்து மக்கள் புகார் வந்தாலும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை செய்ய தவறும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications