பெண்களின் வாழ்வாதாரம் பாஜக ஆட்சியில் மேம்பட்டிருக்கிறது! முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: பெண்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உத்தரப் பிரதேச பாஜக அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். அதில் ஒன்றுதான் முதலமைச்சரின் கன்யா சுமங்கலா யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் தொகையை சமீபத்தில் யோகி ஆதித்யநாத் உயர்த்தியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து பேசிய அவர், "பிரதேசத்தின் இரட்டை என்ஜின் அரசு, கன்யா சுமங்கலா திட்டத்தின் தொகையை 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்த இருக்கிறது. இந்த உத்தரவு 2024-2025ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும். உத்தரப் பிரதேசத்தில் பெண்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ளவும், கல்வியை பெற்று தன்னம்பிக்கையுடன் இருக்கவும் இந்த திட்டம் பயன்படும். முதற்கட்டமாக, இத்திட்டத்தின் கீழ், ஆறு கட்டங்களாக, 15,000 ரூபாய் தொகுப்பு வழங்கப்பட்டது.
அடுத்த ஆண்டு முதல், மகள் பிறந்தவுடன், அவரது பெற்றோர் கணக்கில், 5,000 ரூபாய் செலுத்தப்படும். அதேபோல், மகளுக்கு, ஒரு வயது நிறைவடையும் போது, 1ம் வகுப்பு படிக்கும் போது, 2,000 ரூபாய் மாற்றப்படும். ரூ.3,000; ஆறாம் வகுப்பில் சேரும்போது, ரூ.3,000; ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தால், ரூ.5,000; மகள் பட்டதாரி, டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு படித்தால், ரூ.7,000 அவரது கணக்கிற்கு மாற்றப்படும். இத்திட்டத்தின் மூலம் இன்று மாநிலத்தில் 16.24 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள்.
உத்தரப்பிரதேச அரசை பொறுத்த அளவில் பெண்கள் சுயமரியாதையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்று நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். பாஜக ஆட்சியில் பெண்களின் வாழ்வாதாரம் உயர்ந்திருக்கிறது" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications