பாஜக அரசு விவசாயிகளுக்கு பக்க பலமாக நிற்கிறது! உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு வருவதாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
வட இந்தியாவில் குறிப்பாக உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக நீர் நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளன. அதேபோல அணைகளும் நிரம்பியுள்ளதால் அதிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது. இது ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நீர் மட்டம் அதிகரித்து விளை நிலங்களில் இந்த நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில் காசியாபாத், மதுரா, நொய்டா போன்ற மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டன. இங்கிருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மீட்டு செல்லும் பணியை பேரிடர் மீட்பு படையினர் மேற்கொண்டுள்ளனர். இது குறித்து பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "வெள்ளம் பாதிக்கப்பட்டபோது மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை மற்றும் மருந்து பொருட்கள் போதுமான அளவு கையிருப்பு இருந்து.
ஆனால் பலரின் கவலையும் விளை நிலங்கள் குறித்துதான் இருந்தது. இதற்காக அரசு ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. அதன்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது. இது பாஜக அரசு மீது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளின் கவலைகள், கோரிக்கைகள் கண்டுக்கொள்ளப்படவில்லை. அவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். ஆனால் தற்போது பாஜக அரசு விவசாயிகளுக்கு பக்க பலமாக நிற்கிறது" எ்னறு கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications