அடுத்த 3 ஆண்டுகளில் 1 கோடி வேலை வாய்ப்புகள்.. உ.பியின் கேம் சேஞ்சர் பாஜகதான்! யோகி ஆதித்யநாத் உறுதி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: அடுத்த 3 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என அம்மாநில முதலமைச்சர் யோகி அதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோராக்பூரின் சஹ்ஜன் கிராமத்தில் அமைந்துள்ள போலரம் மஸ்காரா இன்டர் கல்லூரியில் ரூ.10.43 மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சிறிய விளையாட்டு மைதானத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். உத்தர பிரதேசத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதன் மூலம் மாநிலத்தில் ரூ.40 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடுகள் செய்ய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஓப்பந்தம் போட்டிருக்கிறது. இதனால் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பாஜக கூறி வருகிறது.

Yogi Adityanath is confident that 1 crore jobs will be created in Uttar Pradesh in the next 3 years

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளையும் முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளது. எனவே மாநிலத்தின் மீது மத்திய பாஜக சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இப்படியாக நடைபெற்றதுதான் உலக முதலீட்டாளர்கள் மாநாடாகும். அதேபோல உத்தரப் பிரதேசத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளுாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவதுதான் எங்கள் நோக்கம் என பாஜக கூறி வருகிறது.

இந்த நோக்கத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டதுதான் உலக முதலீட்டாளர்கள் மாநாடு. இதற்கு பின்னர் நடத்தப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடரிலும் மாநில அரசு 1 டிரில்லியன் டாலர் வளர்ச்சியை பிரதிபலிக்கும் நோக்கில் பல புதிய திட்டங்களையும் அறவித்தது. இந்த திட்டங்களை செயல்படுத்த அதிக அளவில் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. அதாவது இதற்கு முன்னர் எந்த பட்ஜெட்டிலும் இதுபோன்று அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மேலும் இந்த வளர்ச்சியை சாத்தியமாக்க 10 முக்கிய துறைகளில் தலைக்கீழ் மாற்றம் ஏற்படுத்த வெண்டும் என மாநில அரசு முடிவெடுத்தது.

Yogi Adityanath is confident that 1 crore jobs will be created in Uttar Pradesh in the next 3 years

அதன்படி கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு புதிய திட்டங்களையும் யோகி ஆதித்யநாத் தொடக்கி வைத்து வருகிறார். நேற்று கோரக்பூரில் சிறிய விளையாட்டு மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் சிறப்புரையாற்றிய அவர், "மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நாங்கள் விரைவில் ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்லட்களை விநியோகிக்க இருக்கிறோம்.

மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க நாங்கள் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறோம். மட்டுமல்லாது புதிய கல்லூரிகளையும் தொடங்கி வருகிறோம். இதே சஹ்ஜன் கிராமத்தில் விரைவில் ஒரு பாலிடெக்னிக் கல்லுரி மற்றும் அடல் குடியிருப்பு பள்ளி விரைவில் கட்டப்படும். இதன் மூலம் இந்த பகுதி மக்கள் கல்விக்காக வெளியூருக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+