“ஆசிரியர்களுக்கு இலவச டேப்லெட் திட்டம் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தும்!” யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு இலவசமாக 'டேப்லெட்' வழங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த திட்டம் குறித்து பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், "இது பள்ளி கல்வியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்" என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விரிவாக பேசியதாவது, "நமது மாநில காவல்துறையில் பெண்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் பாஜக ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது. ஒரு சமூகம் முன்னேற வேண்டும் எனில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைக்கப்பட வேண்டும். தற்போது பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய பிரச்னையாக வரதட்சணை இருக்கிறது. இந்த வரதட்சணையை ஒழிக்க வெகுஜன திருமணம் அவசியமாகிறது.

கடந்த 6 ஆண்டுகளில் அடிப்படைக் கல்வியில் மாநிலம் பெரிய பாய்ச்சலை எட்டியுள்ளது. மூடப்படும் தறுவாயில் உள்ள பல பாடசாலைகள் இந்தக் காலப்பகுதியில் புத்துயிர் பெற்றுள்ளன. அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கட்டிடங்கள், உள்கட்டமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்புடன் கற்பித்தல் தரம் ஆகியவற்றில் கணிசமான மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
பாஜக ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்னர், அதாவது 2017ம் ஆண்டுக்கு முன்பு, இந்த பள்ளிகள் பரிதாபகரமான நிலையில் இருந்தன. ஆனால் பாஜகதான் கல்வியில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது நமது கல்வி முறையானது புதிய வடிவத்தை எட்டியுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில், மாநிலத்தில் உள்ள அடிப்படைக் கல்வி கவுன்சில் மற்றும் இடைநிலைக் கல்வி கவுன்சில் பள்ளிகளில் 1.64 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கவுன்சில் பள்ளிகளின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த, 11,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடக்க கல்வி மற்றும் மேல்நிலை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இலவச டேப்லெட்களை வழங்க இந்த அரசு முடிவெடுத்துள்ளது. அடுத்த ஆண்டுக்குள் மாநிலம் முழுவதும் உள்ள 2.36 லட்சம் ஆசிரியர்களுக்கும் டேப்லெட்கள் வழங்கப்படும் என்று நான் அறிவித்திருந்தேன். இந்த திட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல இந்த திட்டம் பள்ளி கல்வியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்" என்றும் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications