Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேற லெவல்.. யோகியின் "தித்திப்பு" அறிவிப்பு.. என்னாது 1 டிரில்லியன் டாலரா.. பூரித்த உ.பி. விவசாயிகள்

உத்தரப் பிரதேசத்தில் கரும்பு விவசாயிகள் நிலை குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கரும்பு விவசாயிகளின் வாழ்க்கையில் புத்துயிர் ஊட்டப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறிக்கொண்டு இருப்பதாக பாஜக தலைவர்கள் கூறி வரும் நிலையில், உத்தரப் பிரதேசம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இதற்கேற்றவாறு சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிலும் பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதாவது தொழில் வளர்ச்சி, மருத்துவம் மற்றும் கல்வியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

Yogi Adityanath is proud of the revival of sugarcane farmers in Uttar Pradesh

மட்டுமல்லாது வேளாண் தொழில் வளர்ச்சிக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பட்ஜெட் மீது உரையாற்றிய யோகி ஆதித்யநாத் கடந்த காலங்களை விட பாஜக ஆட்சி காலத்தில் மாநிலத்தில் கூடுதல் முதலீடுகள் குவிந்துள்ளது என்று கூறியுள்ளார். 2017ம் ஆண்டுக்கு முன்னர் வரை உத்தரப் பிரதேசத்தில் குண்டர்களின் ஆட்சி நடைபெற்று வந்ததாகவும், பாஜக தற்போது மக்களுக்கான, விவசாயிகளுக்கான, தொழிலாளர்களுக்கான ஆட்சியை வழங்கி வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று வேளாண் தொழிலை ஊக்கப்படுத்தும் விதமாக மானிய விலையில் வழங்கப்பட்ட 77 டிராக்டர்களை விவசாயிகளுக்கு அவர் வழங்கினார். இந்நிகழ்வில் பேசிய அவர், "உத்தரப் பிரதேசத்தில் கரும்பு விவசாயம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதன் மூலம் கரும்பு மட்டுமல்லாது எத்தனாலும் தயாரிக்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் வேளாண்மை என்பது ஒரு நஷ்டமடையும் தொழிலாக இருந்தது. வயல்களில் கரும்பு எரிக்கப்பட்டது. அதேபோல மாதத்தில் சில நாட்கள் மட்டுமே கரும்பு ஆலைகள் இயக்கப்பட்டு வந்தன.

Yogi Adityanath is proud of the revival of sugarcane farmers in Uttar Pradesh

ஆனால் தற்போது இது லாபம் கொழிக்கும் தொழிலாக மாற்றப்பட்டிருக்கிறது. முன்பை விட விவசாயிகள் தற்போது இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். கரும்பை அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு உரிய ஆதார விலை வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகளின் தற்கொலை குறைந்திருக்கிறது. சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் எரிபொருள் அளவு குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு மாற்றாகதான் நாங்கள் எத்தனாலை உற்பத்தி செய்கிறோம். தேசிய அளவில் உத்தரப் பிரதேசத்தை போல வேறெந்த மாநிலமும் அதிக அளவு எத்தனாலை உற்பத்தி செய்வதில்லை.

இதற்கு காரணம் கரும்பு கொள்முதல்தான். முன்பை விட தற்போது இந்த கொள்முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல இதர விவசாயிகளுக்கும் இந்த அரசு பாதுகாப்பை வழங்கியுள்ளது. கோதுமைக்கான அடிப்படை ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அடுத்தது உருளைக்கிழங்கும் இருக்கிறது. மேலும், விவசாயிகளுக்கு விளைபொருட்களை அறுவடை செய்ய நவீன இயந்திரங்களும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் பாகிஸ்தான் உலக நாடுகளிடம் கடன் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், உத்தரப்பிரதேசம் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+