உத்தரப் பிரதேசத்திற்கென்று பெருமைகள் இருக்கின்றன.. அதை மீட்டது பாஜகதான்! யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்திற்கு என சில பெருமைகள் இருக்கின்றன என்றும் அது கடந்த கால ஆட்சியில் மீட்டெடுக்கப்படாமல் அழிவின் விளிம்புக்கு சென்றுவிட்டதாகவும் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார். மட்டுமல்லாது இந்த பெருமைகளை மீட்டது பாஜக தலைமையிலான அரசுதான் என்றும் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை பாஜக சிறப்பாக கொண்டாடி வருகிறது. இம்மாநில அரசியல் வரலாற்றை பொறுத்த அளவில், இதுவரை யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியில் நீடித்ததில்லை. அந்த வகையில் யோகி ஆதித்யநாத் புதிய சாதனையை படைத்துள்ளார். இதனை பாஜக கொண்டாடி வருகிறது. இதன் மூலம் பாஜக அரசின் சாதனைகளை மக்கள் மத்தியல் கொண்டு சேர்த்து வருகிறது.

இந்நிலையில் பாஜக அரசின் சாதனைகள் குறித்து யோகி ஆதித்யநாத் பேசியதாவது, "மீரட் வரலாற்று சிறப்புமிக்க நகரமாகும். ஏனெனில் இங்குதான் இந்தியாவின் முதல் புரட்சி போராட்டம் வெடித்தது. கடந்த 1857ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி இந்த புரட்சி வெடித்தது. இது ஒட்டுமொத்த இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றியது. அதேபோல 11ம் தேதி நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் மீரட் மக்கள் முழு அளவில் பங்கேற்று டபுள் என்ஜின் அரசை ட்ரிபிள் என்ஜின் அரசாக மாற்ற புரட்சி செய்ய வேண்டும். மீரட் குறித்து பாஜக புரட்சிகர சிந்தனையை கொண்டிருக்கிறது.
ஆனால் கடந்த ஆட்சி காலத்தில் மீரட் என்பது திருடப்பட்ட கார்களிலிருந்து உதிரி பாகங்களை அகற்றி அதனை பிரித்து விற்கும் நகரமாக அறியப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் மீரட் நகருக்கு இந்த இந்த பெயரை மாற்றி மீரட் என்றால் வளர்ச்சி மற்றும் தேசியவாதம் பற்றிய நேர்மறையான சிந்தனைக்கு பெயர் பெற்ற நகரம் என்று மாற்றியது. மீரட்டை போலவே இந்தியாவின் பெயரும் சர்வதேச அளவில் வேறுமாதிரி ஒலிக்க தொடங்கியுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்னர் இந்தியா என்றால் ஏளனமாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்தியா மீது சர்வதேச நாடுகளுக்கு ஒரு மரியாதை ஏற்பட்டுள்ளது. இதற்கும் பாஜக அரசும், பிரதமர் நரேந்திர மோடியும்தான் காரணம். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லியிலிருந்து மீரட் வர சுமார் 4 மணி நேரம் வரை ஆகும். ஆனால் பாஜக அரசு 12 வழி விரைவு சாலையை கட்டமைத்தது. இதன் பின்னர் டெல்லியிலிருந்து மீரட்டுக்கு சுமார் 45 நிமிடங்களில் வந்துவிடலாம். சாலை போக்குவரத்து எளிதாக்கப்பட்டதை போல ரயில் போக்குவரத்தையும் எளிதாக்க பாஜக அரசு முயன்று வருகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications