புதிய கட்டமைப்புடன் மின்னும் ஜான்சி நகரம்! வேலை வாய்ப்பில் அசத்தி காட்டிய உ.பி அரசு.. யோகி பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி நகரத்தை தரம் உயர்த்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளித்துள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "நொய்டாவை மேம்படுத்த தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அது நல்ல பலனை கொடுத்திருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் நொய்டா புதிய பாதையில் சிறப்பாக பயணித்து வருகிறது. நகரங்களின் கட்டமைப்புகளை சிறப்பாக மாற்ற அமல்படுத்தப்பட்ட முயற்சிகள் பலனளித்துள்ளதையடுத்து மாநிலத்தின் மற்ற நகரங்களையும் மேம்படுத்த இதே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில், ஜான்சி நகரம் மாற்றமடைந்து வருகிறது.

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் தொழிற்சாலையை ஜான்சியில் தொடங்க கடந்த 2021ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியிருந்தார். இதற்கான இடங்கள் கையகப்படுத்தப்பட்டு, தொழிற்சாலை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இது ஜான்சி மாவட்டத்தின் வளர்ச்சியை வேகப்படுத்தும். இளைஞர்கள் வேலைக்காக வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. ஜான்சி நகரத்தை ஒட்டியுள்ள 33 கிராமங்கள் நகரத்துடன் நேரடியாக இணைக்கப்படும்.
நாங்கள் மாநிலத்தின் வளர்ச்சியை ட்ரில்லியன் டாலராக உயர்த்த திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான எல்லா சாத்தியமான வாய்ப்புகளையும் பயன்படுத்தி வருகிறோம். எங்கள் இளைஞர்களின் உழைப்பு மற்ற மாநிலங்களுக்கு பலனளிப்பதை விட, சொந்த மாநிலத்திற்கு பலனளிப்பதைதான் நாங்கள் அதிகம் விரும்புகிறோம். அந்த வகையில், சிறு நகரங்களை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் நல்ல பலனை கொடுத்திருக்கிறது. நேற்று நொய்டா, இன்று ஜான்சி நாளை வேறு ஒரு நகரம் என தொடர்ச்சியாக வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்" என்று கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications