நலத்திட்டங்களில் செம வேகம்.. தேசத்திற்கு முன்மாதிரி உ.பிதான்! முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 96 லட்சம் MSMEக்கள் இருக்கின்றன. இவர்களின் வளர்ச்சிக்கு மாநில அரசு உதவி செய்து வருகிறது.
லக்னோ: நலத்திட்டங்களை அமல்படுத்துவதில் தேசிய அளவில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவில் பட்ஜெட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறை தொழில் வளர்ச்சி மற்றும் சுகாதாரத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. மாவட்டம்தோறும் ஒரு மருத்துவக் கல்லூரியை உருவாக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான நேற்று சட்டமன்றத்தில் உரையாற்றிய யோகி ஆதித்யநாத், சமூக நலத்திட்டங்களை அமல்படுத்துவதில் தேசிய அளவில் உத்தரப் பிரதேசம் முதல் இடத்தில் இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் தனது அரசின் சாதனைகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார். அவர் மேலும் பேசியதாவது, "கரும்பு உற்பத்தியிலும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச கேஸ் சிலிண்டர் விநியோகத்திலும் உத்தரப் பிரதேசம் முதல் இடத்தில் இருக்கிறது.

எம்எஸ்எம்இ
உஜ்வாலா திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 1.74 கோடி குடும்பங்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் இருப்பதை போன்று இந்தியாவில் வேறு எங்கும் அதிக அளவில் எக்ஸ்பிரஸ் சாலைகள் கிடையாது. மேலும் சாலையோர வியாபாரிகளுக்கு பராமரிப்பு செலவுகளுக்காக பணம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாது அடல் பென்ஷன் யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி யோஜனாவின் பலன்களை வழங்குவதில் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 96 லட்சம் சிறுகுறு தொழில்கள் இருக்கின்றன.

சுகாதாரம்
இந்தியாவில் வேறு எங்கும் இந்த அளவுக்கு கிடையாது. அப்படி இருக்கையில் இத்தொழில்களை மேம்படுத்த அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. மேலும் வேளாண் இடுபொருட்களுக்கு வழங்கப்பட வேண்டிய மானியத்தை நாங்கள் வங்கி கணக்கு மூலம் முறையாக செலுத்தி வருகிறோம். சுகாதாரத்தை பொறுத்த அளவில் ஒருபடி முன்னெடுத்து வைத்திருக்கிறோம். அதாவது மாநிலம் முழுவதும் கூடுதல் மருத்துவக்கல்லூரிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் நாட்டில் அதிக மருத்துவக் கல்லூரிகளை கொண்டிருக்கும் மாநிலம் எனும் சாதனையை விரைவில் படைப்போம்.

உணவு
மறுபுறம் உணவு தானிய உற்பதி, ஏழைகளுக்கு கழிப்பறைகளை உருவாக்குதல், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை செயல்படுத்துதலில் உத்தரப் பிரதேசம் நாட்டிற்கு முன்மாதிரியாக இருக்கிறது. இதுவரை 12.77 லட்சம் பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மனித-விலங்கு மோதலை பேரிடராகவும் நாம் அறிவித்திருக்கிறோம். இதற்கு முன்னர் இப்படி எந்த அரசும் அறிவித்தது கிடையாது. பால் உற்பத்தியிலும் மாநிலம் முதல் இடத்தில் இருக்கிறது. உண்மையை சொல்வதெனில் மாநிலத்தில் எவ்வித பாகுபாடும் யாருக்கும் காட்டப்படுவதில்லை.

மாநில அரசு
ஏழைகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது.இந்த அரசு மாநில சுகாதார கொள்கைகளை அமல்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறது" என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். முன்னதாக பாஜக அரசு மீது கடுமையான விமர்சனத்தை மாநில எதிர்க்கட்சிகள் எழுப்பியிருந்தன என்பது குறுப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications