சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் உ.பி பெண்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்! யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் கடந்த 6 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசம் முழுவதும் உள்ள பெண்கள் சுய வேலை வாய்ப்பின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், "கடந்த ஆறு ஆண்டுகளாக உத்தரப் பிரதேசத்தின் பெண்கள் மற்றும் மகள்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதற்காக மாநில அரசு தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குற்றவாளிகள் மற்றும் தவறு செய்பவர்களுக்கு எதிராக மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது தற்போதும் நீடித்து வருகிறது. இதை முதலமைச்சரான நானே மேற்பார்வை செய்து வருகிறேன்.

இது தவிர தலைமைச் செயலாளர் மாதாந்திர ஆய்வுக் கூட்டங்களை நடத்துகிறார், மேலும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) இந்தக் குற்றங்கள் தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு சரியான நேரத்தில் உத்தரவுகளை வழங்குகிறார், இதன் விளைவாக இதுபோன்ற குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் கணிசமான வெற்றி கிடைத்திருக்கிறது. ஆகஸ்ட் 4 நிலவரப்படி, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான 98.10 சதவீத வழக்குகளை தீர்த்து வைத்திருக்கிறது.
அதேபோல நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து தீர்வு காண்பதிலும் நாங்கள் விவேகமாக செயல்பட்டு வருகிறோம். பெண்கள் தொடர்பான குற்றங்களை ஒடுக்க, பவர் மொபைல், மகளிர் உதவி மையம் 1090, மகளிர் போலீஸ் பீட் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தவிர மகளிர் புகார் போலீஸ் சௌகி ஆலோசனை மையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேச மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் , கடந்த 6 ஆண்டுகளில் 1 கோடிக்கும் அதிகமான கிராமப்புற பெண்கள் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட சுயஉதவி குழுக்கள், 54,657 கிராம அமைப்புகள் மற்றும் 2,935 கிளஸ்டர் அளவிலான கூட்டமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 5,94,456 சுயஉதவிக்குழுக்கள் சுழல் நிதியாக ரூ. 891.68 கோடியை வழங்கியுள்ளது. இது தவிர கடந்த 6 ஆண்டுகளில் 3.75 லட்சத்துக்கும் மேற்பட்ட சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு வாழ்வாதார நோக்கங்களுக்காக ரூ.3,339 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது மாநிலம் முழுவதும் உள்ள பெண்களின் நிலையை மேம்படுத்தும். நாங்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கான விஷயத்தில் சமரசம் செய்துக்கொள்வத்தில்லை" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications