தினை உற்பத்தியில் புதிய மாற்றம்.. உ.பி விவசாயிகளின் வாழ்வில் பாய்ந்த வெளிச்சம்! அசத்திய யோகி அரசு
லக்னோ: சர்வதேச தினை ஆண்டு 2023ஐ கொண்டாடும் விதமாக ஸ்ரீ அன்ன மஹா உத்சவ் இன்று உத்தரப் பிரதேசத்தில் கொண்டாடப்படுகிறது. இதனை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடக்கி வைத்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் இன்று
சர்வதேச தினை ஆண்டு 2023ஐ கொண்டாடும் விதமாக ஸ்ரீ அன்ன மஹா உத்சவ் கொண்டாடப்படுகிறது. இதை தொடக்கி வைத்த அவர், விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "தினை விவசாயத் துறையை ஆதரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் பல முக்கியமான அறிவிப்புகளை இந்த பாஜக வெளியிட்டுள்ளது. இன்று உத்திரப் பிரதேச தினை மறுமலர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீ அன்ன மஹா உத்சவ் நடைபெறுகிறது. தினை விதைகளை உற்பத்தி செய்ய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு (FPOs) ரூ.4.04 லட்சம் மானியம் வழங்கப்படும். அதேபோல தினை பதப்படுத்துதல் மற்றும் பேக்கிங் கம் மார்க்கெட்டிங் மையங்கள் நிறுவ ரூ.95.95 லட்சம் ஒதுக்கப்பட்டது. இந்த நிதி புதிய தினை விதைகளை உற்பத்தி செய்யவும், அதை பதப்படுத்தி சந்தை படுத்துவதற்கும் உதவும்.
ஸ்ரீ அன்ன மஹா உத்சவ், உத்தரப் பிரதேசத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கையில் விரிவான மாற்றங்களை ஏற்படுத்தும். விவசாய ஆராய்ச்சியை மேம்படுத்தவும் இது பயன்படும். அதேபோல இது பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த முயற்சி ஒத்துப்போகிறது. மாநிலத்தில் விவசாயத் துறையை முன்னேற்றுவதில் நிச்சயம் ஒரு மைல்கல்லாக இது இருக்கும். விவசாய சமூகத்தின் நலனுக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்புதான் இந்த ஸ்ரீ அன்ன மஹா உத்சவ்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications