இளைஞர் நலன்தான் முக்கியம்! உ.பி அரசு அதைதான் செய்துகொண்டிருக்கிறது.. யோகி ஆதித்யநாத் பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: சமூகத்தின் பிரச்னைகளுக்கு தீர்வுகளையும், வழிகாட்டுதல்களையும் இளைஞர்கள் எப்போதும் வழங்கி வந்திருக்கிறார்கள் என்றும், இளைஞர் நலனை பாதுகாக்க உத்தரப் பிரதேச அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் முதலமைச்சர் யோகி அதித்யநாத் கூறியுள்ளார்.

இன்று உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ருத்ராக்ஷா சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்தில் 2023ம் ஆண்டுக்கான இளைஞர் 20 உச்சி மாநாடு தொடங்கியது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் ஆகியோர் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தனர். அதில் பேசிய யோகி ஆதித்யநாத், "சமூகத்தின் பிரச்னைகளுக்கு தீர்வுகளையும், வழிகாட்டுதல்களையும் இளைஞர்கள் எப்போதும் வழங்கி வந்திருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.

Yogi Adityanath said that steps have been taken to protect the welfare of the youth

தொடர்ந்து பேசிய அவர், "கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் ஏராளமான சாதனைகளை செய்திருக்கிறார். ஸ்டாண்ட் அப் இந்தியா மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற அற்புதமான திடங்களை தொடங்கி வைத்திருக்கிறார். இது இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. பொருளாரதாரத்தில் இந்தியா கடந்த காலத்தில் 10வது இடத்தில் இருந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் நாடு 5வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது.

சர்வதேச அளவில் இந்தியாதான் அதிக அளவில் இளைஞர் சக்தியை கொண்டிருக்கிறது. இந்த சக்தியை பாஜக அரசு ஆக்கப்பூர்வமான வழியில் கொண்டு சென்றுக்கொண்டிருக்கிறது. இதனால் இந்தியா மேலும் மேலும் முன்னேறும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் எதிர்க்கட்சிகள் இளைஞர்களின் வளர்ச்சிக்காக எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ளவில்லை. எதிர்வரும் 2030ம் ஆண்டில் தெற்கு ஆசியாவிலிருந்து வரும் இளைஞர்கள்தான் இந்த உலகின் பெரும்பகுதியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார்கள்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+