அனைவருக்கும் தரமான மருத்துவ சேவையை வழங்குவதே இலக்கு! உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மருத்துவத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மருத்துவத்துறையில் பெரும் மாற்றம் ஏற்பட இருப்பதாகவும் முதலமைச்சர் யோகி ஆதியநாத் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே மத்தியில் பாஜக ஆட்சி இருப்பதாலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி என்பதாலும் இரட்டை என்ஜின் போல இந்த அரசு செயல்படுகிறது என்று பாஜக கூறி வந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதால் இந்த ஆட்சி டபுள் என்ஜினிலிருந்து ட்ரிபிள் என்ஜின் ஆட்சியாக பரிணமித்துள்ளதாக யோகி ஆதித்யநாத் கூறி வருகிறார்.

Yogi Adityanath said that the goal is to ensure quality medical care for all

இந்நிலையில் நேற்று கூட்டம் ஒன்றில் மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், "உத்தரப் பிரதேசத்தில் நலத்திட்டங்கள் அனைத்தும் விளிம்புநிலை மக்களுக்கு போய் சேர வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. இந்த அரசின் திட்டங்களை பெறாதவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்றுதான் நாங்கள் யோசிக்கிறோம். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மாநிலத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.

உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை கிடையாது. எனவே அவர்கள் கூட்டம் கூட்டமாக வெளி மாநிலங்களில் வேலைக்காக புலம் பெயர் தொழிலாளர்களாக சென்றனர். அங்கு கொத்தடிமை போல நடத்தப்பட்டனர். சரியான உணவு, இருப்பிடம், சுயமரியாதை, சம்பளம் என எதும் முறையாக இல்லாமல் தவித்தனர். ஆனால் பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னர் இந்த நிலைமை மாற்றப்பட்டிருக்கிறது. இங்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தொழில் வளர்ச்சிக்கு இப்படி கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே சமூக வளர்ச்சிக்கும் இந்த பாஜக அரசு முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறது. அதாவது, மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் மருத்துவ கல்லூரியை உருவாக்க போர்க்கால அடிப்படையில் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான அடிப்படை பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளது விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவமனைகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

தனியார் மருத்துவமனைகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், அரசு மருத்துவமனைகள் சிறப்பான சேவைகளை வழங்கும். இதன் மூலம் மருத்துவ துறையில் ஓர் ஆரோக்கியமான போட்டி ஏற்படும். இது மக்களுக்கு நல்ல முறையில் பலனளிக்கும். அனைவருக்கும் மருத்துவ சேவையை விரிவாக்கம் செய்வதே எங்களின் நோக்கம் என்று" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+