“பெண்களின் வளர்ச்சிக்காக உ.பி பாஜக அரசு கடுமையாக உழைக்கிறது!” முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: பெண்களின் வளர்ச்சிக்காகவும், நலனுக்காகவும் உத்தரப் பிரதேச பாஜக அரசு கடுமையாக உழைப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

Yogi Adityanath said that the UP government is working for the development and welfare of women

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் பெண்களின் வளர்ச்சிக்காகவும், நலனுக்காகவும் உ.பி பாஜக அரசு கடுமையாக உழைத்து வருவதாக கூறியுள்ளார்.

உ.பியின் ஹர்தோய் நகரில் நடைபெற்ற நாரி சக்தி வந்தன் சம்மேளனத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், "பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசாங்கம் பெண்களை சுயசார்புடையவர்களாக மாற்றுவதற்கும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இடைவிடாமல் உழைத்து வருகிறது. வலுவான சமுதாயத்தையும் நாட்டையும் கட்டியெழுப்ப பெண்களுக்கு அதிகாரங்களை அளிப்பது மிகவும் முக்கியம்.

முதலமைச்சரின் சாமுஹிக் விவா யோஜனா திட்டத்தின் மூலம் பெண்களுக்கான கடன் சுமை குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 300,000 பெண்கள் ஏற்கனவே திருமணம் செய்திருக்கின்றனர். மேலும் லட்சக்கணக்கான பெண்களுக்கு இந்த திட்டம் விரிவாக்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ், அரசாங்கம் ஒரு ஜோடிக்கு ரூ.51,000 செலவழிக்கிறது, இதில் ஒவ்வொரு மணப்பெண்ணின் வங்கிக் கணக்கில் தலா ரூ.35,000 டெபாசிட் செய்யப்படுகிறது. அதேபோல ஒவ்வொரு ஜோடிக்கும் ரூ.10,000 ரொக்கம் பரிசாக வழங்கப்படுகிறது. இப்படியாக பெண்களின் சுய முன்னேற்றத்திற்கு அரசு கடுமையாக உழைத்து வருகிறது" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+