பாதுகாப்பான வேலைக்கு கேரண்டி! தொழில்துறை பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் யோகி ஆதித்யநாத் அரசு!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு, பாதுகாப்பான நகரத் திட்டத்திற்கு ஏற்ப தொழில்துறை பகுதிகளின் பாதுகாப்பையும் மேம்படுத்த உள்ளதாக அறிவித்திருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்கு முன்னர் இம்மாநிலத்தில் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்ததில்லை. அந்த வகையில் யோகி ஆதித்யநாத் புதிய சாதனையை படைத்திருக்கிறார். இந்த சாதனையை கொண்டாடும் விதமாக ஏராளமான புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார். அதில் ஒன்றுதான் பாதுகாப்பான நகரத்திற்கான திட்டம். தற்போது இந்த திட்டத்திற்கு ஏற்ப தொழில்துறை பகுதிகளின் பாதுகாப்பையும் மேம்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

Yogi Adityanath said that Uttar Pradesh government is ensuring the safety of industrial areas

அதாவது இந்த நகரங்களில் ஏறத்தாழ அனைத்து முக்கியமான இடங்களில், மக்கள் கூடும் இடங்களில் சிசிடிவி கேரமிரா பொருத்தப்படும். அதேபோல கழிப்பறைகள், தீயணைப்பு நிலையங்கள், காவல் நிலையங்கள், சுத்தமான குடிநீர், உணவு மற்றும் சுகாதார பரிசோதனை நிலையங்கள் உருவாக்கப்படும். இந்த திட்டங்களுக்காக தோராயமாக ரூ.235 கோடி ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பெண்கள், தொழில்முனைவோர், பணியாளர்கள் மற்றும் தொழில்துறை பகுதிகளில் உள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

42 புறக்காவல் நிலையங்கள், 12 தீயணைப்பு நிலையங்கள், 25 ஆயிரம் தெருவிளக்குகள், 480 உயர் மாஸ்ட் விளக்குகள், 68 கழிப்பறைகள், பெண்களுக்கான விடுதிகள் ஆகியவை கட்ட திட்டமிடப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 42 காவல் நிலையங்களில் கணிசமான அளவில் பெண் காவலர்கள் பணியில் நியமிக்கப்படுவார்கள். அதேபோல தொழிற்துறைகளின் தேவைக்கேற்ப திறமையான பணியாளர்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக திறன் மேம்பாட்டு மையங்களும் அமைக்கப்படும்.

இந்த முயற்சி உத்தரப் பிரதேசத்தின் வேலைவாய்ப்பு சதவிகிதத்தை அதிகரிக்கும். குறிப்பாக இளைஞர்கள் எந்த துறையில் படிக்கிறார்களோ அதே துறையில் அவர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+