இது உ.பியின் டைம்! 1 டிரில்லியன் பொருளாதாரம்தான் இலக்கு.. 5 ஆண்டுகள் டார்கெட் வைத்த யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், இதற்கு 5 ஆண்டுகளை டார்கெட்டாக பிக்ஸ் செய்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. லக்னோவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.34 லட்சம் கோடி வரை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் மற்றொரு நிகழ்வும் இடம் பிடித்துள்ளது. அதாவது, உ.பி முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இதுவரை இம்மாநிலத்தில் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்ததில்லை. இதனை மாநில அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது.
இந்நிலையில் மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என யோகி தொடர்ந்து கூறி வந்தார். இப்படி இருக்கையில் நேற்று யோகி தலைமையில் ஆய்வு கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் அனைத்து துறைகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். அதில் சிறப்புரையாற்றிய யோகி ஆதித்யநாத் "நமது இலக்கு 1 டிரில்லியன் பொருளாதாரம்தான். இதனை அடைய நமக்கு 5 ஆண்டுகள் போதும். 2027ம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும்.
அதிகாரிகள் இதற்கான முக்கிய துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். உற்பத்தி, IT & ITES (தகவல் தொழில்நுட்பம் இயக்கப்பட்ட சேவைகள்), மத சுற்றுலா மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும். அதேபோல, எரிசக்தி, சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு, கல்வி, உணவு பதப்படுத்துதல் மற்றும் MSME போன்ற துறைகளிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மாநிலத்தில் உள்ள முக்கிய பெருநகரங்களை பல்வேறு துறைகளுக்கான மையங்களாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வரிசையில், லக்னோவை நாட்டின் முதல் "AI நகரமாக" மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மாநிலத்தை பசுமை எரிசக்தி மையமாக மாற்றுவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications