விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க புதிய முயற்சி! வேற லெவலில் மாறும் உ.பி! அசத்தும் யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேச விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை மற்ற மாநிலங்களில் விற்க வகை செய்யும் திருத்தத்திற்கு, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில், விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை மற்ற மாநிலங்களில் விற்க வகை செய்யும் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். சமீபத்தில் அம்மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்த திருத்தம் முன்மொழியப்பட்டது. இதற்கு யோகி ஒப்புதல் அளித்திருக்கிறார். இது குறித்து நிதி அமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா கூறுகையில், "இதற்கு முன்னர் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை வெளி மாநிலங்களில் விற்க கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் இன்று இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் உ.பி விவசாயிகள் வெளி மாநிலத்திலும், வெளி மாநில விவசாயிகள் உ.பியிலும் விளை பொருட்களை விற்பனை செய்ய முடியும்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது குறித்து உ.பி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் உ.பி விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட்டு, மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக இருக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications