உத்தர பிரதேசத்தில் 20 புதிய ஹைடெக் சிறைகளை கட்டும் யோகி அரசு.. ஏன் முக்கியம் தெரியுமா
உத்தரப் பிரதேசத்தில் புதிய சிறைகள் கட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
லக்னோ: உத்தரப்பிரதேச சிறைகள் அதிகப்படியான கைதிகளைக் கையாள வேண்டியதைக் கருத்தில் கொண்டு, தற்போது 20 புதிய, உயர் தொழில்நுட்ப சிறைகளைக் கட்ட யோகி ஆதித்யநாத் அரசு முடிவு செய்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் இப்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருக்கிறது. அம்மாநில அரசு இப்போது அங்கே பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது.
அங்குள்ள சிறைகளில் அதிகப்படியான கைதிகளைக் கையாள வேண்டியதைக் கருத்தில் கொண்டு, யோகி ஆதித்யநாத் அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

20 ஹைடேக் சிறைகள்
அதன்படி, சிறைகளே இல்லாத 11 மாவட்டங்கள் உட்பட மொத்தம் 20 இடங்களில் புதிய சிறைகளைக் கட்ட முடிவு செய்துள்ளது. இது உயர் தொழில்நுட்ப வசதிகளையும் கண்காணிப்பு அமைப்புகளையும் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது தவிர, ஒரு மத்தியச் சிறை மற்றும் ஒன்பது மாவட்டங்களில் சிறைகள் இதர சிறைகள் கட்டும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. சில சிறைகளில் செல்களின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில்
முதல்வர் யோகியின் அறிவுறுத்தல் அடிப்படையில் இதற்காக மிகப் பெரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுமான பணிகளை விரைவாகத் தொடங்கும் சிறைத்துறைக்கு கிரீன் சிக்னல் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழல்களைக் கருத்தில் கொண்டு இவை ஹைடெக் சிறைகளாக உருவாக்கப்படும். அடுத்த இரண்டு முதல் ஐந்து ஆண்டுகளில் இந்த சிறை கட்டுமானங்களை முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

என்ன காரணம்
இதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தனிப்பட்ட முறையில் ஒப்புதல் கொடுத்துள்ளார். முன்னதாக, நடந்த உயர்மட்ட கூட்டத்தில் தற்போது சிறைகளில் அதிகப்படியான சிறைவாசிகளைக் கையாள வேண்டியுள்ளதாக அம்மாநில சிறை நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மூத்த அதிகாரிகள் கூறுகையில், "தற்போது 13,669 கைதிகளைத் தங்க வைக்கும் ஏதுவான ஏழு மத்தியச் சிறைகளில் 15,201 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்,

அதிகப்படியான கைதிகள்
இது 111 சதவீத விகிதமாகும். இதேபோல், 49,107 கைதிகளைக் கையாளக் கூடிய 62 மாவட்ட சிறைகளில் 194 சதவீத விகிதம் அதாவது 95,597 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 306 கைதிகள் தங்கக்கூடிய இரண்டு துணைச் சிறைகளில் 664 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர், அதாவது 216 சதவீதம். பெண்கள் மத்தியச் சிறையில் 120 கைதிகள் இருக்கலாம் என்ற நிலையில் அதில் 148 கைதிகள் உள்ளனர். இதை நாங்கல் முதல்வருக்குத் தெரியப்படுத்தினோம்" என்றார் .

ஏன் முக்கியம்
இதையடுத்து நிலைமை புரிந்து கொண்ட முதல்வர் யோகி, இதன் காரணமாகவே புதிய சிறைகளைக் கட்ட அனுமதி தந்து, உடனடியாக நிதியும் ஒதுக்கியுள்ளார். பொதுவாக சிறையில் அதிகப்படியான நபர்களை வைத்திருந்தார். சுகாதார சிக்கல் தொடங்கி பல சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாகவே உத்தரப் பிரதேச அரசு இப்போது புதிய சிறைகள் கட்ட அனுமதி கொடுத்து விரைவாக நடவடிக்கை தொடங்கப்படுவது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications