லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொண்டாட்டி தலையை அறுத்து.. 1.5 கிமீ தூரம் ஊர்வலம் போன கணவர்.. இதில் தேசிய கீதம் வேற.. அலறிய கிராமம்!

மனைவி தலையை 1.5 கிமீ தூரம் எடுத்து சென்ற நபர் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

லக்னோ: மனைவியின் தலையை கையில் வைத்து கொண்டு.. போலீஸ் ஸ்டேஷனை நோக்கி ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தே சென்ற நபரை பார்த்து மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.

கொடுமையின் உச்சம் இப்போது உத்திரபிரதேசத்தில்தான் நடந்து கொண்டிருக்கிறது.. பாலியல் அக்கிரமம் ஒருபக்கம் என்றால் வன்முறை அராஜகம் இன்னொரு பக்கம் தாண்டவமாடுகிறது.

உத்தர பிரதேசம் மாநிலம் பரபங்கி மாவட்டம் பஹதுர்பூர் என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வருபவர் அகிலேஷ் ராவத்.. இவரது மனைவி ரஜனி.. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.. ஆனால் 2 வருடத்திற்கு முன்பு உடம்பு சரியில்லாமல் இறந்துவிட்டது.

5 மாத கர்ப்பிணி மகள் மீது.. துடிக்க துடிக்க ஆசிட் ஊற்றிய பெற்ற தந்தை.. திருவள்ளூரில் பயங்கரம் 5 மாத கர்ப்பிணி மகள் மீது.. துடிக்க துடிக்க ஆசிட் ஊற்றிய பெற்ற தந்தை.. திருவள்ளூரில் பயங்கரம்

மகா கோபம்

மகா கோபம்

அகிலேஷுக்கு வயது 30, ரஜனிக்கு வயது 25 ஆகிறது.. இதில் அகிலேஷ் மகா கோபக்காரராம்.. வீட்டில் எதற்கெடுத்தாலும் ரஜனியுடன் சண்டை போட்டுக் கொண்டே இருப்பாராம். இந்நிலையில், தம்பதியர், வீட்டில் இருந்தபோது இருவருக்கும் இடையே திரும்பவும் ஏதோ ஒரு பிரச்சனைக்காக வாக்குவாதம் ஆரம்பித்துள்ளது.. சாதாரணமாக ஆரம்பித்த வாக்குவாதம் உச்சக்கட்டத்துக்கு போனது.

கத்திகுத்து

கத்திகுத்து

அடுத்து மனைவியை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார் அகிலேஷ்.. பிறகு தரதரவென இழுத்து வீட்டிற்கு வெளியே தள்ளினார். பட்டப்பகலில் நடந்த இந்த சண்டையை தெருவில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர்.. ரஜனியை தெருவில் தள்ளியும் ஆவேசம் அடங்காத அகிலேஷ், கத்தியை கொண்டு வந்து சரமாரியாக குத்திவிட்டார்.. உடம்பில் ஆங்காங்கே கத்திகுத்து விழுந்ததில் சுருண்டுவிழுந்து ரஜனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

முண்டம்

முண்டம்

ஆனால், அப்போதும் ஆத்திரம் அடங்காத அகிலேஷ், அவர் இறந்த பின்னரும் ரஜனியின் தலையை உட்கார்ந்து துண்டாக வெட்டி எடுத்தார்... முண்டத்தை தெருவிலேயே போட்டுவிட்டு, தலையை மட்டும் கையில் எடுத்து கொண்டு நடக்க ஆரம்பித்தார்.. ரோட்டில் தலையுடன் நடந்து வந்த நபரை பார்த்து மக்கள் தலைதெறிக்க ஓடினார்கள்.. சிலர் இதை பற்றி தகவலும் போலீசுக்கு சொன்னார்கள். ஆனாலும் போலீஸ் ஸ்டேஷன் தூரமாக இருப்பதால் அந்த தலையுடன் சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்றார்.

தேசிய கீதம்

தேசிய கீதம்

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட போலீசார், பாதி வழியிலேயே வந்து கொண்டிருந்த அகிலேஷை மடக்கி கைது செய்தனர்.. கையில் இருந்த தலையை பறிமுதல் செய்ய முயன்றனர்.. அப்போது திடீரென தேசிய கீதம் பாடினார்... அதன்பிறகு "பாரத் மாதா கீ ஜே" என்று முழக்கமிட்டு போலீசாரை திணறடித்தார்.. இதன்பிறகு தலை, மற்றும் தெருவில் விழுந்த கிடந்த முண்டத்தை பறிமுதல் செய்து அகிலேஷிடம் விசாரணையும் நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் உபியின் பரபங்கி மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
30 year old man murders wife walks with her severed head for 1.5 km near uttarpradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X