லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நம்பர் 1 ஊழல்வாதி என்ற பட்டத்துடன் உங்க அப்பா இறந்தார்.. ராகுலை கடுமையாக சீண்டிய மோடி!

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் வாழ்க்கை ஒரு ஊழல்வாதியின் வாழ்க்கையாக முடிந்தது என்று பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Google Oneindia Tamil News

லக்னோ: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் வாழ்க்கை ஒரு ஊழல்வாதியின் வாழ்க்கையாக முடிந்தது என்று பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

பிரதமர் மோடி லோக்சபா தேர்தலுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். முக்கியமாக அவர் பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை அவர் உத்தர பிரதேசத்தில் பிரச்சாரம் செய்தார். பாஜக கூட்டணியை சேர்ந்த பல தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

மோடி பேச்சு

மோடி பேச்சு

பிரச்சாரத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் கட்சி என் மீது களங்கம் விளைவிக்க பார்க்கிறது. பாஜக ஆட்சி மீது எந்த விதமான குறைகளையும் சொல்ல முடியாது என்பதால் பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். ரபேல் வழக்கிலும் அப்படித்தான் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவிக்கிறார்கள்.

அபிநந்தன் குறித்து பிரச்சாரம் செய்த மோடி.. எந்த தப்பும் இல்லையே.. தேர்தல் ஆணையம் தீர்ப்பு! அபிநந்தன் குறித்து பிரச்சாரம் செய்த மோடி.. எந்த தப்பும் இல்லையே.. தேர்தல் ஆணையம் தீர்ப்பு!

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி என் மீது ரபேலில் களங்கம் விளைவிக்க பார்க்கிறார். என்னை களங்க படுத்தி, என்னை சிறியவன் போல காட்டி ஆட்சியை பிடிக்க பார்க்கிறார். ஆனால் அவர்கள் ஆட்சி அமைத்தால் வலுவற்ற ஒரு ஆட்சிதான் உருவாகும்.

முடியாது

முடியாது

என் மீது ராகுல் காந்தி சொல்லும் புகார்களை நிரூபிக்க முடியாது. இந்த புகார்கள், அவருக்குத்தான் பெரிய சிக்கலை ஏற்படுத்தும். நான் அவரை போல பணக்கார குடும்பத்தில் பிறக்கவில்லை. நான் மக்களோடு, மக்களாக ஏழையாக பிறந்தேன்.

மிக மோசம்

மிக மோசம்

உங்கள் அப்பா ராஜீவ் காந்தியை பெரிய நல்லவர் போல காங்கிரஸ் சித்தரித்தது. மிஸ்டர் கிளீன் என்று கூட சொன்னார்கள். ஆனால் அவர்தான் நம்பர் ஒன் ஊழல்வாதி. உங்கள் அப்பாவின் வாழ்க்கை ஒரு ஊழல்வாதியாகத்தான் முடிந்தது, என்று பிரதமர் மோடி பிரச்சாரத்தில் குறிப்பிட்டார்.

English summary
"Your Father's Life Ended As 'Corrupt No.1, He is not Mr Clean says PM Modi in a Rally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X