மதுரையில் அதிர்ச்சி.. அடகு கடையில் 1400 சவரன் நகை, ரூ. 9 லட்சம் கொள்ளை
மதுரை: மதுரையில் நரிமேட்டில் அடகு கடையில் பூட்டை உடைத்து 1400 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மதுரை நரிமேடு கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் வீட்டிலேயே தனலட்சுமி அடகு கடை என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். 30 ஆண்டுகளாக நடத்தி வரும் இவரது கடை அப்பகுதியில் பிரபலம் என்பதால் சுற்றுப்புற பகுதி மக்கள் இவரது கடையில் வந்து அடகு வைப்பது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று இரவு கடையை பூட்டிக் கொண்டு வீட்டில் தூங்க சென்றார் கோபிநாத். இதையடுத்து காலை கடையை திறக்க வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. கேஸ் சிலிண்டர் கட்டிங் இயந்திரங்கள் மூலம் பாதுகாப்பு பெட்டகங்கள் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த 1400 சவரன் நகைகள் கொள்ளை போயின. பின்னர் 9 லட்சம் ரொக்கமும் கொள்ளை போனது.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். 1400 பவுன் அதிகம் என்பதால் போலீஸாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அதற்கான ரசீதுகளை காண்பித்தவுடன் போலீஸார் நம்பி விசாரணையில் இறங்கினர்.
அப்போது அங்கிருந்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்த போது அதிகாலை 2.30 மணிக்கு இருநபர்கள் கடைக்கு அருகே வந்து அங்கிருந்த சிசிடிவியை சேதப்படுத்தினர். இந்த காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications