அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் 15 நாள் கஸ்டடி.. மதுரை சென்ட்ரல் ஜெயிலில் அடைக்கப்பட்ட எஸ்.ஜி.சூர்யா!

Subscribe to Oneindia Tamil

மதுரை: நேற்று இரவு கைது செய்யப்பட்ட பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து மதுரை மாவட்ட விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து எஸ்.ஜி.சூர்யா மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாஜவின் மாநில செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி.சூர்யா. இவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவர் என அறியப்பட்டவர். சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படும் அவர், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து பதிவு செய்து வருபவர்.

15 days judicial custody for BJP State Secretary SG Suryah who was arrested last night

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அதில், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார் என்றும் பதிவிட்டிருந்தார்.

மேலும், "எங்கே உங்கள் உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள்! ஆளும் பாஜக அரசுக்கு எதிராக என்றால் உடனே முந்திக்கொண்டு வருவீர்கள். இப்போது எங்கே சென்று விட்டீர்கள்? பதுங்கி விட்டீர்களா அல்லது பம்மி விட்டீர்களா? பிரிவினை வாதம் பேசி சிவப்பு கொடியை போர்த்தி கொண்டு அரசியல் செய்யும் உங்கள் போலி அரசியல் அந்த மலக்குழியை விட மோசமாக துர்நாற்றம் வீசுகிறது. மனிதனாக வாழ வழி தேடுங்கள் தோழரே" என சு.வெங்கடேசனை விமர்சித்திருந்தார் எஸ்.ஜி.சூர்யா.

இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்த எஸ்.ஜி.சூர்யா மீது சிபிஐஎம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மதுரை சைபர் கிரைம் போலீசார், நேற்று இரவு 11 மணியளவில் சென்னை தி.நகரில் எஸ்.ஜி.சூர்யாவை அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதையறிந்த பாஜவினர், காவல் ஆணையர் அலுவலகம் முன்பு குவிந்தனர். சூர்யா கைதை கண்டித்து திடீரென பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

15 days judicial custody for BJP State Secretary SG Suryah who was arrested last night

கைது செய்யப்பட்ட பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை மதுரைக்கு அழைத்து சென்றனர். சூர்யா மீது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, இரு பிரிவினர் இடையே பகையை ஏற்படுத்துதல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 5க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து எஸ்.ஜி.சூர்யாவை மதுரை முதலாவது விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட் ராமசங்கரன் இல்லத்தில் போலீசார் இன்று காலை ஆஜர்படுத்தினர். இதையடுத்து சூர்யாவை நீதிமன்ற காவலில் அடைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

எஸ்.ஜி. சூர்யாவிற்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் அளித்து மதுரை மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ராம்சங்கரன் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார், எஸ்.ஜி.சூர்யாவை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இது பாஜகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+