13 வயசில் இருந்தே.. மொத்தம் 600 பேர்.. கதறிய சிறுமி.. அப்படியே அதிர்ந்து போன மதுரை போலீசார்..!
மதுரையில் 16 வயது சிறுமியிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்
மதுரை: 16 வயது சிறுமியை 5 வருடங்களாக 600-க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பாக 12 பேர் இதுவரை கைதாகிய நிலையில், பல பகீர் தகவல்களும், பின்னணியும் வெளியாகி வருகின்றன.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தருவதாக, தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அதிரடியாக சம்பவ இடத்துக்கு சென்று சோதனையை நடத்தி, அங்கிருந்த 16 வயது சிறுமியை மீட்டனர்.

மேலும் அதிரடியாக 7 பேரை கைது செய்தனர்.. அதில் 5 பெண்களும் அடக்கம்.. அனார்கலி, சுமதி, ஜெயலட்சுமி, ஐஸ் சந்திரா, தங்கம், என்பது அவர்கள் பெயர்.. இவர்கள் 5 பேருமே புரோக்கர்கள்.. இதில் ஜெயலட்சுமி என்பவர் சிறுமியின் சொந்தக்காரராம்.. 2015-ம் ஆண்டு சிறுமிக்கு 10 வயசாக இருக்கும்போது, ஜெயலட்சுமி என்பவர் அழைத்து வந்து சிறுமியை வளர்த்து வந்துள்ளார்.
ஜெயலட்சுமி பாலியல் தொழிலில் கொடி கட்டி பறப்பவர்.. 13 வயதில் சிறுமி வயதுக்கு வந்தவுடனேயே, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். ஆனால் வயதுக்கு வருவதற்கு முன்பிருந்தே பாலியல் தொல்லைகள் ஆரம்பமாகி உள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், 600-க்கும் மேற்பட்டோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளனர்.. இந்த 5 பெண் புரோக்கர்களும் சிறுமியை மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டம், மாநிலங்களை சேர்ந்த நபர்களிடம் சிறுமியை பாலியலுக்கு உட்படுத்தி வற்புறுத்தி, லட்சக்கணக்கில் சம்பாதித்தும் உள்ளனர். இப்போது இந்த விவகாரம் தொடர்பாக மொத்தமாக 12 பேர் கைதாகி உள்ளனர்.. இதில் ஆட்டோ டிரைவர், தரகர் என அத்தனை பேரும் அடக்கம்.
சிறுமியை ஏமாற்றி நாள்தோறும் ஒவ்வொரு நபர்களிடம் பாலியல் தொழிலில் ஈடுபடவைத்துள்ளனர்... இந்த 5 பேரையும் ஏற்கனவே பலமுறை போலீசார் கைது செய்ய முயன்றபோதெல்லாம் தப்பி உள்ளனர்.. இப்போதுதான் இவர்கள் வசமாக சிக்கி உள்ளனர்.. இதில் கொடுமை என்னவென்றால், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மெடிக்கல் செக்கப் செய்தபோது, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது... அதாவது சிறுமியின் உடல்மாற்றங்கள் 70 வயது அளவிற்கு மாறியுள்ளதாக டெஸ்ட் முடிவில் தெரியவந்துள்ளது.
"13 வயசு முதல் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டேன்... 3 வருஷத்தில் 600 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டேன்" என்று அந்த சொன்ன அந்த சிறுமியின் வாக்குமூலத்தை கேட்டு மதுரை காவல் துறையே உறைந்து போய் கிடக்கிறது..
இதில் அந்த 600 பேர் நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.. தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதால், நிலையில் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.. இந்த அளவுக்கு விவகாரம் சென்றுள்ளது என்றால், நிச்சயம் பின்புலத்தில் யாரோ பலமானவர்கள் இருக்கிறார்கள் என்றும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications