தலைக்கேறிய டிக் டாக் மோகம்.. பெரும் சிக்கலை தேடிக் கொண்ட தீபா - ரூபா.. வீணாய் போன வாழ்க்கை!
டிக்டாக் பெண்களை விலைமாதர்களாக சித்தரித்த 2 பேர் கைதாகி உள்ளனர்
Recommended Video
மதுரை: தீபாவும், ரூபாவும் ரொம்ப நெருக்கம்.. டிக்டாக்கில் இவர்கள் செய்த அட்டகாசமும், ஈடுபாடும்.. அவர்களை விலைமாதர்களாக சித்தரித்த அபாயத்துக்கு சென்றுவிட்டது!
மதுரை, ஒத்தக்கடையை சேர்ந்தவர்கள் தீபா, ரூபா (பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன) இவர்கள் நெருங்கிய தோழிகள். இருவருமே டிக்டாக்-கில் தோன்றி, நடிப்பு திறமையை வெளிக்காட்டுபவர்கள். இருவருமே கல்யாணமானவர்கள். இருவருக்கும் 25 வயதாகிறது!

இவர்கள் இருவருமே இப்படி டிக்டாக்கிலேயே விழுந்து கிடப்பதால், கணவன்மார்கள் இவர்களை விட்டு பிரிந்துவிட்டனர். இதனால் இந்த பெண்கள் அவரவர் அம்மா வீட்டில் வசித்து வருகிறார்கள்.
இவர்கள் காமெடி, நெகிழ்ச்சி, ஆன்மீகம், காதல் என பல வகை நடிப்புத்திறமைகளை வெளிக்காட்டி டிக்டாக் செய்பவர்கள்.. அதிலும் தாயும் மகளுமாக நடிக்கும் டிக்டாக் வீடியோ ரொம்ப பிரபலம். இதில் தீபாவுக்கு தேனியைச் சேர்ந்த சுகந்தி என்ற பெண்ணின் நட்பு கிடைத்தது. இந்த பெண்ணுக்கு வயது 26!
சுகந்தியின் டிக் டாக் வீடியோக்கள் வித்தியாசமானது.. தனக்கு நிறைய லைக் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தன்னுடைய காதலனுடன் செய்யும் சேட்டைகள், நெருக்கங்களையும் டிக் டாக்கில் பதிவிட்டு வந்துள்ளார். இதை பிடிக்காத தீபா சுகந்தியுடன் நட்பை துண்டித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுகந்தி, இரு தோழிகளின் மானத்தை வாங்க முடிவு செய்தார்.
அதன்படி, தீபா, ரூபாவின் டிக் டாக் வீடியோக்களை டவுன்லோடு செய்து, இருவரையும் விபச்சாரிகளாக சித்தரித்து, சோஷியல் மீடியாவில் போட்டுவிட்டார் சுகந்தி. இதை கண்டு இரு பெண்களின் குடும்பத்தினரும் அதிர்ந்தனர்.. இதையடுத்து, தீபாவும், ரூபாவும், ஒத்தக்கடை போலீசில் புகார் செய்யவும், தேனி பெண்ணையும், அவரது காதலனையும் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க அவர்கள் இருவரும் சேர்ந்து முன் ஜாமீன் பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து, சுகந்தியிடம் இருந்த 2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாமல், வெறும் லைக்குகளுக்கு ஆசைப்பட்டு, இன்று லைப்பை தொலைத்துவிட்டு நிற்கின்றனர் இந்த அப்பாவி பெண்கள்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications