பிள்ளைமார், முதலியார் சமுதாயத்திற்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு தர வேண்டும்.. மாநில தலைவர் வலியுறுத்தல்
மதுரை: அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் மாநில தலைவர் ஓம் சக்தி ராமச்சந்திரன் பேசுகையில், தமிழ்நாட்டில் முதலியார், பிள்ளைமார் சமுதாயத்தினரின் 2 முதல் 2.5 கோடி பேர் வெள்ளாளர் என்ற பிரிவில் உள்ளனர். தமிழ்நாட்டின் சுமார் எட்டு கோடி மக்கள் தொகையில், 20% க்கும் அதிகமாக இந்த சமுதாயத்தைச் சேர்ந்தோர் வாழ்கின்றனர். எனவே கல்வி வேலைவாய்ப்பில் பிள்ளைமார், முதலியார் சமுதாயத்திற்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று கூறினார்.
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தினரின் ஆலோசனை கூட்டம் மதுரையில் நடந்தது. மாவட்ட தலைவர் ராமச்சந்திர குமார் தலைமை தாங்கி, வரவேற்றார். பாண்டிய மண்டல தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில் மாநிலத் தலைவர் ஓம்சக்தி ராமச்சந்திரன், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"தமிழ்நாட்டில் முதலியார், பிள்ளைமார் சமுதாயத்தினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வெள்ளாளர் என்ற பிரிவின் கீழ், பல உட்பிரிவுகளாக தமிழ்நாடு முழுவதும் பரவி வாழ்கின்றனர். மாநிலம் முழுவதும் நாங்கள் எடுத்த கணக்கீட்டின்படி, 2 முதல் 2.5 கோடி மக்கள் தொகை உள்ளனர். தமிழ்நாட்டின் சுமார் எட்டு கோடி மக்கள் தொகையில், 20% க்கும் அதிகமாக இந்த சமுதாயத்தைச் சேர்ந்தோர் வாழ்கின்றனர்.
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கீடு எடுக்கப்பட்டால், முழு மக்கள் தொகை விவரங்கள் தெரியவரும். தமிழ்நாட்டு அரசியலை நிர்ணயம் செய்யும் எண்ணிக்கையில் உள்ளனர். எனவே, கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அரசு சலுகைகளில் 15 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மதுரை மாநகராட்சியின் முதல் மேயராக இருந்தவர் மதுரை முத்து. இவரது திரு உருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 31 ஆம் தேதி திறந்து வைக்கிறார். அவருக்கு எங்கள் சமூகத்தின் சார்பில் பெரிய வரவேற்பு அளிக்க இருக்கிறோம்.அவரிடமும் எங்களது கோரிக்கையை வலியுறுத்த இருக்கிறோம்" என்றார்.
செயல் தலைவர் பரிமளநாதன், மதுரை மாவட்ட துணைத் தலைவர்கள் பாக்கியநாதன், கர்னல் மணிவண்ணன், செயலாளர் கே. சண்முகசுந்தரம், இணைச்செயலாளர் குமாரவேல், துணைச் செயலாளர் ஆதவன், பொருளாளர் ஞானசேகரன் முன்னாள் மேயர் மதுரை முத்து சிலை கமிட்டி தலைவர் முத்து செயலாளர் ஜெகன்நாதன், பொருளாளர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications