மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடு ரோட்டில் வைத்து ஆட்டோ டிரைவர் சட்டையைப் பிடித்த மதுரைப் பெண்.. அவதூறாகப் பேசியதால் ஆவேசம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    அவதூறாகப் பேசியதால் ஆட்டோ டிரைவர் சட்டையைப் பிடித்த பெண்

    மதுரை: மதுரையில் 5 ரூபாய் மீதி சில்லறையை திருப்பி கொடுக்காத ஆட்டோ டிரைவரை பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை கோரிப்பாளையம் பகுதியில் பெண் ஒருவர் நேற்று ஷேர் ஆட்டோவில் ஏறினார். தெற்கு வாசல் செல்ல வேண்டும் என்றார். இதையடுத்து அந்த பெண் இறங்கும் இடம் வந்தவுடன் ஷேர் ஆட்டோ டிரைவரிடம் எவ்வளவு என கேட்டார்.

    A Lady attacked Auto driver for not giving change

    அதற்கு அவர் 15 ரூபாய் என்றார். உடனே அந்த பெண் ரூ. 20-ஐ நீட்டினார். அப்போது மீதி ரூ.5-ஐ கொடுக்காமல் ஆட்டோவை எடுக்க முயன்றார். ரூ 5 சில்லறை கொடுங்கள் என கேட்ட அந்த பெண்ணை டிரைவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    இதனால் அந்த பெண்ணுக்கு கோபம் தலைக்கேறியது. ஆட்டோ டிரைவரின் சட்டையை பிடித்து இழுத்து நடுரோட்டில் வைத்து தாக்கினார். உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூடினர்.

    அவரை திட்டிக் கொண்டே அந்த பெண் தன் கைகளால் அடித்தார். தகவலறிந்த போக்குவரத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி ஆட்டோ டிரைவரை அழைத்து சென்றனர்.

    இந்த காட்சிகளை அங்கு நின்றிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். இதை அடுத்து அந்த காட்சிகள் வைரலாகியது.

    English summary
    Madurai Auto driver was attacked by lady in Madurai for not giving remaining change.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X