நடிகர் சூரி வீட்டு கல்யாணத்தில் திடீரென வந்த மர்ம ஆசாமி.. செஞ்ச வேலையால் கலங்கிப்போன குடும்பம்
மதுரை: மதுரையில் நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகை திருட்டு நடந்த விவகாரத்தில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 சவரன் நகைகளை போலீசார் மீட்டனர்.
Recommended Video
இதனிடையே அந்த இளைஞரை பிடித்து நடத்திய விசாரணையில் மதுரை, சிவகங்கை,தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 18 இதற்கு மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் சூரியின் இல்லத் திருமண விழா கடந்த 9ஆம் தேதி மதுரை சிந்தாமணி பகுதியில் இருக்கக்கூடிய பிரபல தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது,

திரை பிரபலங்கள்
கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைபெற்ற நடிகர் சூரியின் இல்லத் திருமண விழாவில் தமிழகம் முழுவதும் உள்ள முக்கியமான சில பிரமுகர்களும் திரை பிரபலங்களும் பங்கேற்றனர்.

போலீசில் புகார்
இந்த நிலையில் மணமகளின் உறவினர் மணமகளுக்கு பரிசாக வழங்க வைத்திருந்த சுமார் 10 சவரன் நகையை மணமகள் அறையில் இருந்து மர்மநபர்கள் திருடிச் சென்றதாக நடிகர் சூரியின் மேலாளர் சூரிய பிரகாஷ் கீரைத்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

சிக்கிய வாலிபர்
அதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமண மண்டபத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் திருமண நிகழ்ச்சியை பதிவு செய்யபட்ட வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த போது வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் அங்கும் இங்கும் சுற்றி வருவது பதிவாகி இருந்தது.

கண்டுபிடிப்பு
அதனை அடிப்படையாக கொண்டு காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் பரமக்குடியை சேர்ந்த விக்னேஷ் என்பதும் அவர் நகை திருடியதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து பரமக்குடியில் பதுங்கி இருந்த அவரை கைது செய்த கீரைத்துறை காவல்துறையினர் அவரிடம் இருந்து 10 சவரன் நகையை மீட்டு மதுரை அழைத்து வந்தனர்.

பலே திருடன்
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் மீது மதுரை, சிவகங்கை,தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 18 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications