பட்ட இடத்திலேயே படும்.. இங்கே பிடிஆர்.. அங்கே மூர்த்தி.. மீட்டிங்கில் "அவரிடம்" கடுகடுத்த அண்ணாமலை?
மதுரை: பட்ட இடத்திலேயே படும் என்பார்களே.. அப்படித்தான் தமிழ்நாடு பாஜகவில் நடந்து கொண்டு இருக்கிறது. உட்கட்சி மோதல் உச்சத்தில் இருக்கும் பாஜகவில் தற்போது இன்னொரு மோதல் ஒன்று நடைபெற்று வருவதாக பாஜக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு பாஜகவில் சீனியர்களுக்கும் - புதிய நிர்வாகிகளுக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. சீரியலில் காட்டப்படுவது போல.. இவர் அவருடன் மோதல்.. அவர் இவருடன் மோதல் என்று சொல்லும் அளவிற்கு மாறி மாறி நிர்வாகிகள் மோதிக்கொண்டு இருக்கிறார்கள்.
சமீபத்தில் டெய்சி - திருச்சி சூர்யா இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இவர்கள் மாறி மாறி கெட்ட வார்த்தையில் பேசிக்கொண்ட ஆடியோ எல்லாம் வெளியானது. இதில் கடைசியில் சூர்யா பாஜகவில் இருந்து சஸ்பெண்டும் செய்யப்பட்டார்.

சஸ்பெண்ட்
அதன்பின் பாஜகவில் இருந்தே வெளியேறுவதாக சூர்யா அறிவித்தார். இன்னொரு பக்கம் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை என்று காயத்ரி ரகுராம் ட்விட்டரில் அண்ணாமலைக்கு எதிராக முறுக்கிக்கொண்டார். கட்சியில் ஒருவரின் உத்தரவிற்கு மட்டுமே மதிப்பு இருக்கிறது.. கட்சியில் monopoly இருக்கிறது என்று புகார் வைத்தார். அண்ணாமலைக்கு எதிராக கடுமையான புகார்களை வைத்து.. அடிக்கடி ட்விட் செய்து வந்தார். விளைவு காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அண்ணாமலைக்கு ஆதரவாக ஐடி விங் ஒன்று இயங்குவதாகவும் காயத்ரி பெயரை குறிப்பிடாமல் சொல்லிவிட்டு போனார்.

கேசவ விநாயகம்
இன்னொரு பக்கம் பாஜகவின் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்தை நேரடியாக திருச்சி சூர்யா விமர்சனம் செய்துள்ளார்.அதில், தமிழ்நாடு பாஜகவின் எதிர்காலம் அண்ணாமலைதான். அண்ணாமலைதான் அடுத்த தமிழ்நாடு முதல்வர். இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆகவும் வாய்ப்பு உள்ளவர் இவர்தான். இவர்தான் பாஜகவின் எதிர்காலம். இளம் வயதில் கட்சியில் மிகப்பெரிய தலைவராக அண்ணாமலை உருவெடுத்து இருக்கிறார். அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றெல்லாம் திருச்சி சூர்யா பாராட்டி உள்ளார். ஆனால் போகிற போக்கில் முக்கியமான இரண்டு பெயரை மாட்டிவிட்டுள்ளார்.

விமர்சனம்
எல் முருகன், கேசவ விநாயகம் ஆகியோரின் தலையீடு இல்லாமல் அண்ணாமலை சிறப்பாக செயல்படுவார். இவர்கள் நான் இல்லாமல் இனி சந்தோசமாக இருப்பார் என்று திருச்சி சூர்யா, எல் முருகன், கேசவ விநாயகம் மீது புகார்களை அடுக்கி உள்ளார். அதோடு நீங்கள் உங்கள் விளையாட்டுகளை காயத்திரி (LM) மற்றும் டெய்சி (KV) ஆகியோருடன் விளையாட வேண்டாம் என்று கூறியுள்ளார். அதாவது காயத்திரி பெயருக்கு பின் எல் முருகன் இனிஷியலையும், டெய்சி பெயருக்கு பின் கேசவ விநாயகம் இனிஷியலையும் போட்டு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் திருச்சி சூர்யா. போகிற போக்கில் பாஜகவில் புதிய பூகம்பத்தை கிளப்பி உள்ளார். பாஜகவின் இரண்டு மூத்த தலைவர்களை சீண்டி... கட்சிக்குள் அண்ணாமலைக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளார் திருச்சி சூர்யா.

மதுரை
இந்த நிலையில்தான் மதுரையில் இருக்கும் மூத்த நிர்வாகி ஒருவர் அண்ணாமலை மீது அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. மதுரையை சேர்ந்த அந்த மூத்த நிர்வாகி அண்ணாமலையை பெரிதாக மதிப்பது இல்லையாம். அதிலும் ஒரு பக்கம் பிடிஆர்.. இன்னொரு பக்கம் மூர்த்தி என்று திமுகவின் அமைச்சர்களையும் கூட அடிக்கடி சந்திக்கிறாராம். இவர்களின் வீடுகளில் நடக்கும் விழாவிற்கும் கூட இவர் அடிக்கடி சென்று வருகிறாராம். இதனால்தான் அண்ணாமலை அந்த மூத்த தலைவர் மீது செம அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

பாஜக கூட்டம்
சமீபத்தில் சென்னையில் பாஜக கூட்டம் நடைபெற்றது. எல்லா நிர்வாகிகளின் போன்களும் வாங்கி வெளியிலேயே வைக்கப்பட்டு மிகவும் சீக்ரெட்டாக இந்த மீட்டிங் நடத்தி உள்ளது. பாஜக நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டு உள்ளனர். பாஜக உட்கட்சி மோதல் தொடங்கி லோக்சபா தேர்தல் வரை பல விஷயங்கள் பற்றி இதில் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. உட்கட்சி பூசல், லோக்சபா தேர்தல், பூத் கமிட்டி உருவாக்கம், கூட்டணி அமைப்பது போன்ற விவரங்கள் குறித்து அண்ணாமலை ஆலோசனை செய்து உள்ளார். இந்த மீட்டிங்கில் கட்சிக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். யாராக இருந்தாலும் கட்சிக்கு கட்டுப்பட வேண்டும் என்று அண்ணாமலை கூறி இருக்கிறாராம். இதில்தான் அந்த மூத்த பாஜக தலைவருக்கு... திமுகவுடன் நெருக்கமாக இருப்பதை நிறுத்துங்கள் என்று அண்ணாமலை அட்வைஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மதுரை
பட்ட காலிலேயே படும் என்பார்களே.. அப்படிதான்.. ஏற்கனவே மதுரையில்தான் பாஜகவில் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரையில் அமைச்சர் பிடிஆர் வாகனத்தில் செருப்பு வீசப்பட்ட சம்பவம் சர்ச்சையானது. மதுரையில் ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நல்லடக்கத்தின் போது நடைபெற்ற இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜகவினர் அத்துமீறி நடந்து கொண்ட காரணத்தால் ஒரு ராணுவ வீரரின் உடல் நல்லடக்கம் பற்றிய செய்திகள் அடங்கி போய்.. அமைச்சர் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தற்போது தலைப்பு செய்தி ஆனது. இந்த விவகாரம் கையை மீறி போனதால் அண்ணாமலை வேறு வழியின்றி விளக்கமும் கொடுத்தார். அதில், நான் வன்முறையை ஆதரிக்க மாட்டேன். நம்முடைய கட்சி வன்முறையை ஆதரிக்கும் கட்சி அல்ல. அதற்காக நாம் கட்சி நடத்தவில்லை. வன்முறையை நாம் சொல்லி கொடுக்க போவதில்லை. நமக்கு ஆழமான தேசிய கலாச்சரத்தின் மீது நம்பிக்கை உள்ளது, என்று கூறினார். ஆனால் அதே சமயம் இதை எப்படி அரசியலாக்கலாம் என்று அண்ணாமலை பேசியதாக வெளியான ஆடியோ ஒன்றும் பெரிய சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் முன்னாள் எம்எல்ஏ சரவணன் பிடிஆரை நேரில் பார்த்து மன்னிப்பு கேட்டதோடு பாஜகவில் இருந்தும் வெளியேறினார். பாஜகவின் கொள்கைகள் எனக்கு ஒத்துவராது. பாஜக பிரிவினை அரசியலை செய்கிறது என்றும் புகார் வைத்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications