துடியான தெய்வம்.. எச்சில் இலை காயும் வரை பெண்கள் வரக்கூடாது! மதுரையில் விநோத கறி விருந்து திருவிழா
மதுரை: மதுரையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோத கறி விருந்து திருவிழா அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. நாயக்க மன்னர் காலத்திலிருந்து இந்த திருவிழா நடந்து வருவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் பெரும் தெய்வங்களை விட, நாட்டுப்புற தெய்வங்களுக்கு திருவிழாக்கள் சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். இன்னும் குறிப்பாக தென் மாவட்டங்களில் இந்த திருவிழாக்கள் மிகச்சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இன்று மதுரை மாவட்டத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோத திருவிழா நடந்து வருகிறது.

மதுரையின் திருமங்கலம் பகுதியில் அனுப்பப்பட்டி கிராமம் இருக்கிறது. இக்கிராமத்தின் காவல் தெய்வமாக கரும்பாறை முத்தையா இருக்கிறார். இவருக்கு உருவம் கிடையாது. ஆயினும் கோயில் இருக்கிறது. இந்த தெய்வம் மற்ற காவல் தெய்வங்களை காட்டிலும் மிகவும் துடியானது என்று மக்கள் கூறுகின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை மார்கழி மாதத்தில் இக்கோயில் திருவிழா நடைபெறும். திருவிழாவுக்காக ஆடுகள் கோயிலுக்கு நேர்ந்து விடப்படும். அதிலும் கருப்பு நிற ஆடுகள் மட்டுமே நேர்ந்துவிடப்படும்.
இந்த ஆடுகள் வயல்வெளியில் மேய்ந்தால் கூட அதை மக்கள் துரத்த மாட்டார்கள். கரும்பாறை முத்தையா சாமி, ஆடு மூலமாக வருவதாக அவர்கள் நம்புகிறார்கள். இந்த ஆடுகள் திருவிழாவின் போது வெட்டப்பட்டு சாமிக்கு படைக்கப்படும். 100 ஆடுகள், 1000 கிலோ அரிசி கொண்டு இந்த படையல் வைக்கப்படும். இதில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்கள் பங்கேற்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தொடக்கத்தில் இந்த விழா நடத்தப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் திருவிழா கோலாகலமாக தொடங்கப்பட்டிருக்கிறது. ஏராளமான ஆடுகள் வெட்டப்பட்டு அது பெரிய அண்டாக்களில் போட்டு குழம்பு வைக்கப்பட்டிருக்கிறது. பின்னர் வடித்து மலைபோல குவித்து வைக்கப்பட்டிருக்கும் சோற்றில் இந்த குழம்பு கொட்டப்பட்டு படையல் நடத்தப்பட்டிருக்கிறது. படையலுக்கு பின்னர் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்களுக்கு உணவு பரிமாறப்பட்டிருக்கிறது.
இந்த விழாவில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. பெண் குழந்தைகள் கூட பங்கேற்க கூடாது என்பது வழக்கம். அதேபோல ஆண்கள் சாப்பிட்டுவிட்டு இலையை எடுக்காமல் சென்றுவிடுவார்கள். அது அங்கு மாயமாக மறைந்துவிடும் என்பது இவர்களது நம்பிக்கை. இப்படி இலை மறைந்து போகும் வரை அந்த கோயிலுக்கு எந்த பெண்ணும் வழிபாட்டுக்கு செல்லமாட்டார்கள்.
இந்த திருவிழா இன்று தொடங்கி மூன்று நாட்கள் வரை நடைபெறுகிறது. இதில் திருமங்கலத்தை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆண்கள் பங்கேற்றிருக்கின்றனர். நாயக்க மன்னர் ஆட்சி காலத்திலிருந்து இந்த திருவிழா நடத்தப்பட்டு வருவதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications