மதுரை அருகே நடுரோட்டில் வழிமறித்து இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் வெட்டிக்கொலை
மதுரை: அலங்காநல்லூர் அருகே முன் பகை காரணமாக இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் வழிமறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற அய்யனகவுண்டன்பட்டியை சேர்ந்த வாலிபர் ஜெயசூர்யா (22) என்ற வாலிபரை பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வாலிபரை மடக்கி வழிமறித்து தலை, மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் சராமரியாக வாலிபர் ஜெயசூர்யாவை அரிவாளால் வெட்டி சாய்த்தது. பின்னர் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் சம்பவ இடத்தில் உயிருக்கு போராடிய வாலிபர் ஜெயசூர்யாவை மீட்ட பொதுமக்கள் உடனடியாக அந்த வழியாக வந்த தீயணைப்பு வாகனத்தில் ஏற்றி அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது செல்லும் வழியிலேயே பரிதாபமாக வாலிபர் ஜெயசூர்யா இறந்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில். முன் பகை காரணமாக வாலிபர் ஜெயசூர்யா வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இறந்த ஜெயசூர்யா மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளதாகவும் ஜாமின் பெற்று வெளியூரில் தலைமறைவாக இருந்து வந்ததாகவும், இன்று தனது சொந்த ஊருக்கு திரும்பிய போது அவரை வெட்டி படுகொலை செய்து அந்த கும்பல் பழிக்கு பழி வாங்கியிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications