Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"என் நண்பன் நவீனுக்காக..” அலங்காநல்லூரில் 20 காளைகளை அடக்கிய அபி சித்தர் சொன்ன வார்த்தை!

Subscribe to Oneindia Tamil

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 20 காளைகளை அடக்கி முதலிடம் பெற்ற அபி சித்தர், நேற்று முன் தினம் நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி பலியான நவீன் குமாருக்காக வென்றதாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைத்திருநாளில் நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் ஜனவரி 14 அவனியாபுரத்திலும், நேற்று ஜனவரி 15 பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இன்று மதுரை அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்துள்ளது.

alanganallur pongal 2025 jallikattu

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை இன்று காலை 7 மணியளவில் போட்டியை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வீரர்கள் அடக்குவதற்கு காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும், 50 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளை பிடித்த காளையர்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரண்டு, வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

சீறிப் பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் சாமர்த்தியமாக அடக்கினர். சில காளைகள் வீரர் களை தெறிக்கவிட்டு, யாரிடமும் பிடி படாமல் பாய்ந்து சென்றன. இறுதிச் சுற்றில் 43 வீரர்கள் பங்கேற்று மாடுகளை அணைந்தனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.

அபி சித்தர் முதலிடம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 20 காளைகளை அடக்கி முதல் இடம் பெற்று கார் பரிசு பெற்றுள்ளார் சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர். முதலிடம் பெற்ற அபி சித்தரை, சக மாடுபிடி வீரர்கள், நண்பர்கள் உயரே தூக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

alanganallur pongal 2025 jallikattu

அப்போது செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு அபி சித்தரை பேசுமாறு கேட்டுக்கொண்டனர். அப்போது பேசிய அபி சித்தர், "இந்த வெற்றிக்கு என் நண்பர்கள் தான் முழுக்க முழுக்க காரணம். என் உடன்பிறவா சகோதரர்கள், என் நண்பர்கள் சேர்ந்து தான் என்னை ஆதரித்து வெற்றி பெறச் செய்துள்ளனர்." என்றார்.

என் நண்பன் நவீனுக்காக

தொடர்ந்து பேசிய அபி சித்தர், "என் நண்பன் விளாங்குடி நவீனுக்காகத்தான் இன்று முதல் பரிசு வென்றேன். அவனியாபுரத்தில் பலியான நவீன் நினைவாக இன்று முதல் பரிசு பெற்றேன். அரசாகப் பார்த்து ஏதாவது செய்தால் நல்லது. அவன் வீட்டுக்கு ஒரே பையன். அவன் இருந்திருந்தால் காலம் முழுவதும் அவனது குடும்பத்திற்கு கவலை இல்லை. அதனை ஈடுகட்டும் வகையில் அரசு செய்தால் நல்லது" எனத் தெரிவித்தார்.

பொங்கல் அன்று நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று மாடு முட்டி படுகாயம் அடைந்த மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் நவீன் குமார் உயிரிழந்தார். இந்நிலையில், சுமார் 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கூட பங்கேற்காமல் உயிரிழந்த நவீன் குமார் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

alanganallur pongal 2025 jallikattu

கடந்த ஆண்டு முதலிடம்

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், அபி சித்தர், 10 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார். அதிக காளைகளை அடக்கி முதலிடம் பெற்ற அபி சித்தருக்கு மஹிந்திரா தார் கார் பரிசாக வழங்கப்பட்டது.

அதற்கு முன்னதாக உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதில், முதல் பரிசாக 18 காளையை அடக்கிய மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 17 நாடுகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் என்ற வீரருக்கு இரண்டாவது பரிசாக 1.5 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

இரண்டாம் இடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்ட மாடுபிடி வீரர் அபி சித்தர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி ஒருதலை பட்சமாக நடந்து கொண்டது என குற்றம்சாட்டினார். முதல் பரிசு பெற்ற கருப்பாயூரணி கார்த்திக்கு 3 சுற்றுகள் விளையாட அனுமதி வழங்கப்பட்டது. கமிட்டியிடம் முறையிட்டும் எனக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. எனக்கு கார் தேவை இல்லை. என்னை முதல் இடம் என்று அறிவித்தாலே போதும் என முறையிட்டது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக வழக்கும் தொடர்ந்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+