கையில் அறுவைச் சிகிச்சை முடிந்து 15 நாள் கூட ஆகல! அதிமுக மாநாட்டிற்கு முதல் ஆளாக வந்த தொண்டர்!
மதுரை: கையில் அறுவைச் சிகிச்சை முடிந்து 15 நாட்கள் கூட ஆகாத நிலையில் மனைவியுடன் மதுரை மாநாட்டில் கலந்துகொண்டு கவனம் ஈர்த்திருக்கிறார் அதிமுக தொண்டர் இளங்கோவன்.
மதுரையில் உற்சாகம் கரைபுரள அதிமுக மாநாடு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோவிலடி கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் -வசந்தா தம்பதியினர் டூவிலரிலேயே 250 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வந்திருந்தனர்.

இளங்கோவனுக்கும் அவரது மனைவி வசந்தாவுக்கும் எம்.ஜி.ஆர். காலம் தொட்டே கட்சி என்றால் உயிராம். இந்நிலையில் வசந்தாவுக்கு கையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழல் வந்ததால் சில நாட்களுக்கு முன்னர் ஆப்ரேஷன் நடத்தப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவரை வீட்டில் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் அதிமுக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கணவர் இளங்கோவனோடு மதுரை வந்து சேர்ந்துள்ளார் வசந்தா.
இன்று நேற்ற பல ஆண்டுகளாக கட்சி நிகழ்ச்சிகள் எதுவாயினும் அதனை தவிர்க்காமல் அட்டெண்ட் செய்து வருவதாக தெரிவிக்கிறார் அதிமுக தொண்டர் இளங்கோவன்.

இந்நிலையில் இளங்கோவனுடனும் அவரது மனைவி வசந்தாவுடனும் அதிமுகவினர் செல்ஃபி எடுத்து தங்கள் கட்சியின் தொண்டர் குறித்து பெருமிதமாக பதிவிட்டு வருகின்றனர். இதேபோல் அதிமுக மாநாட்டுத் திடலில் இன்னும் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
வெளியூர்களில் இருந்து வந்திருப்பவர்கள் விரைவில் வீடு திரும்பும் வகையில் இரவு 8 மணிக்குள் எடப்பாடி பழனிசாமி தனது உரையை முடித்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மாலை 4 மணிக்கெல்லாம் எடப்பாடி பழனிசாமி மாநாடு மேடையேறிவிடுவார் எனத் தெரிகிறது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications