எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும்! கிடாய் வெட்டி அன்னதானம் போட்ட அதிமுக Ex எம்.எல்.ஏ.!
மதுரை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும் என கிடாய் வெட்டி அன்னதானம் வழங்கியிருக்கிறார் அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா.
தடபுடல் கிடாய் விருந்து: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வாவிடைமருதூர் கிராமத்தில் நல்லதங்காள், பெரியையன், சின்னையன் சாமி கோவில் உள்ளது. இங்கு 48 நாள் மண்டல பூஜை நடைபெற்ற நிலையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேண்டுதலுடன் இதில் கலந்துகொண்டனர். அந்த வகையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டி கிடாய் வெட்டி அன்னதானம் வழங்கினார்.

சோழவந்தான் கருப்பையா: கருப்பையாவை பொறுத்தாரை கடந்த 2011-2016 அதிமுக ஆட்சிக்காலத்தில் மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அப்போது சென்னையை சேர்ந்த பெண்ணின் 2 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக எழுந்த புகாரில் கருப்பையா பெயரும் அடிபட்டது. இதையடுத்து அதிமுக ஆட்சியிலேயே கருப்பையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது தான் இந்த அதிரடி ஆக்ஷன் எடுக்கப்பட்டது.
எடப்பாடியின் தீவிர விசுவாசி: அதைத் தொடர்ந்து பதவிக்காலத்தை நிறைவு செய்த அவருக்கு மேற்கொண்டு ஜெயலலிதா எந்தப் பதவியையும் தரவில்லை. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக தன்னை காட்டிக்கொண்டு வரும் மாஜி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, எடப்பாடி பழனிசாமியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து ஏதேனும் ஒன்று செய்து வருகிறார். அந்த வகையில் தான் இப்போது கூட மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என்ற வேண்டுதலுடன் கிடாய் விருந்து படைத்திருக்கிறார்.
கவனத்தை ஈர்க்க: கருப்பையாவை போலவே இன்னும் பலரும் எடப்பாடி பழனிசாமியின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதிமுக அவைத்தலைவராக உள்ள தமிழ் மகன் உசேன், இரண்டு மாதங்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டி நாகூர், ஏர்வாடி உட்பட தமிழகம் முழுவதும் உள்ள தர்காக்களுக்கு விசிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
-
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications