விசாரணைக்கு வருகிறேன்! நாட்டுக்கோழி தருவீங்களா! போலீஸாரிடம் அதிமுக Ex எம்.எல்.ஏ.ராஜவர்மன் குசும்பு!
மதுரை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஆஜரான சாத்தூர் தொகுதி அதிமுக Ex எம்.எல்.ஏ. ராஜவர்மன், போலீஸாரிடம் மதிய உணவுக்கு நாட்டுக்கோழி கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தன்னை தேடி யாரும் அலைய வேண்டாம் என்றும் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்துகொண்டு ஓடி ஒளியமாட்டேன் எனவும் போலீஸாரிடம் காலரை தூக்கிவிட்டப்படி கூறியிருக்கிறார் ராஜவர்மன்.
ராஜேந்திரபாலாஜி தலைமறைவு தொடர்பாக மிக சீரியஸாக விசாரணை நடத்தி வரும் குற்றப்பிரிவு போலீஸாருக்கு ராஜவர்மனின் பேச்சையும், நடவடிக்கையையும் பார்த்த போது அழுவதா சிரிப்பதா என நினைக்கத் தோன்றியதாம்.

Ex அமைச்சர்
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடந்த ஒரு 15 நாட்களாக தலைமறைவாக இருக்கும் நிலையில், அவரை பிடிக்க 6 தனிப்படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ராஜேந்திரபாலாஜிக்கு நெருக்கமானவர்களாக அறியப்படுபவர்களிடம் விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ராஜேந்திரபாலாஜியின் அரசியல் சீடரும் சாத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜவர்மனிடமும் விசாரணை நடைபெற்றிருக்கிறது.

மதிய உணவு
நேற்று நண்பகல் 12 மணியளவில் விசாரணைக்கு சென்ற ராஜவர்மன், தனக்கு மதிய உணவுக்கு நாட்டுக் கோழி வாங்கிக் கொடுப்பீர்களா என போலீஸாரிடம் குசும்பு செய்தாராம். அதனை பொருட்படுத்தாத குற்றப்பிரிவு போலீஸார், இளநீர் மட்டும் வாங்கிக்கொடுத்து தங்களுக்கு தேவையான தகவல்களை திரட்டிக்கொண்டு ராஜவர்மனை அனுப்பி வைத்திருக்கிறது.

அலைய வேண்டாம்
முன்னதாக விசாரணையின் போது, தன்னை தேடி நீங்கள் யாரும் அலைய வேண்டாம் என குற்றப்பிரிவு போலீஸாரிடம் கூறிய ராஜவர்மன், முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்துக்கொண்டு எங்கும் ஓடி ஒளியமாட்டேன் எனத் தெரிவித்திருக்கிறார். இதனிடையே ராஜவர்மனிடம் அவர் பாணியிலேயே பேச்சுக்கொடுத்து சில முக்கிய விவரங்களை குற்றப்பிரிவு போலீஸார் சேகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீண்டும் விசாரணை
இந்த விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த முன்னாள் எம்.எல்.ஏ.ராஜவர்மன், ராஜேந்திரபாலாஜி வர வேண்டிய நேரத்தில் சரியாக வருவார், அவர் உடல்நிலை சரியில்லாதவர். முன் ஜாமின் வாங்குவதற்காக சென்றிருக்கிறார் எனத் தெரிவித்திருக்கிறார். மீண்டும் ராஜவர்மனை அழைத்து இந்தமுறை சற்று கடுமையான முறையில் விசாரணை நடத்தவும் அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications