புலி வேட்டைக்கு போறோம்.. எலி வேட்டைய பத்தி பேசிக்கிட்டு! ஒரே கமெண்டில் OPSஐ காலி செய்த செல்லூர் ராஜு
மதுரை: அவதூறு வழக்கெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. வழக்குகள் எல்லாம் எனக்கு ஜுஜுபி என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டம் ஒன்றில் தமிழக முதல்வர் ஸ்டாலினையும், தமிழக அரசையும் அவதூறாகப் பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ மீது அவதுாறு சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி குற்றவியல் அரசு வழக்கறிஞர் பழனிச்சாமி மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் செல்லூர் ராஜூ நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் முன்னாள் செல்லுார் ராஜூ நேற்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சிவகடாட்சம் முன்பு நேரில் ஆஜரானார். அப்போது வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி 21 தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், “நான் ஆர்ப்பாட்டத்தில் உண்மையை தான் கூறினேன். ஆனால் என் மீது வழக்கு போட்டுள்ளார்கள்.
நான் பொதுவாழ்வுக்கு வரும் போது திமுக தொடர்ந்த கொலை வழக்கிலேயே முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு அந்த வழக்கில் குற்றமற்றவன் என நிரூபித்து விடுதலையானவன். அவதூறு வழக்கெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. வழக்குகள் எல்லாம் எனக்கு ஜுஜுபி. பொதுவாழ்க்கைக்கு வந்தபின்பு வழக்குகளை பார்த்தெல்லாம் அதிமுககாரர்கள் பயப்பட மாட்டார்கள்.
வேட்டி சட்டையை மாத்தலாம்.. என் உடம்புல ஓடுற அதிமுக ரத்தத்தை மாத்த முடியுமா? அதிர வைத்த ஓபிஎஸ்!
தேர்தல் வாக்குறுதியில் கூறிய எதையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை என்பதைத்தான் அன்று ஆர்ப்பாட்டத்தில் பேசினேன். தமிழக மக்கள் நாள்தோறும் நான் அன்றைக்கு ஆர்ப்பாட்டத்தில் பேசியதை தான் பேசிக்கொண்டுள்ளனர். ஆனால் நான் மேடையில் பேசியதால் அவதூறு வழக்கு போடுகிறார்கள்.
குறைகளை களைவதை விட்டுவிட்டு பழைய தகரத்திற்கு பாலீஸ் போடும் வேலையைத் தான் திமுக செய்கிறது. இந்த வழக்கு போட்டதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கிறேன். காரணம், அதனால்தான் இன்று எங்கள் கட்சியில் உள்ள இவ்வளவு வழக்கறிஞர்களை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. எங்கள் கட்சியில் இளைஞர்கள் மட்டுமல்ல, வழக்கறிஞர்களும் அதிகம் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள், ஓ.பன்னீர்செல்வம் அதிமுக சின்னம், கொடி, லெட்டர்பேட் ஆகியவற்றை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது குறித்து கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்கு, “நாங்கள் புலி வேட்டைக்கு செல்கிறோம். எலி வேட்டையை பற்றி பேசாதீர்கள்.. விடப்பா நீ வேற” என செல்லூர் ராஜூ கிண்டலாகத் தெரிவித்தார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications