"புதிய விஞ்ஞானி" போகாத ஊருக்கு வழி சொல்லும் அமைச்சர் பன்னீர்செல்வம்.. ஆர்பி உதயகுமார் பதிலடி!
மதுரை: எடப்பாடி பழனிசாமியை போலி விவசாயி என்று விமர்சித்த வேளாண்துறை அமைச்சரின் எம்ஆர்கே பன்னீர் செல்வத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா மாவட்டங்களில் மழையினால் மூழ்கி சேதமடைந்த குறுவை பயிர்களுக்கான கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி பாதிப்படைந்த விவசாயிகளுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
குறுவை பயிற்சேதம் குறித்த எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு வேளாண் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்ததோடு, இபிஎஸ்-ஐ போலி விவசாயி என்று விமர்சித்தார்.

ஆர்பி உதயகுமார் பதிலடி
இந்த நிலையில் வேளாண் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், விவசாயம் செழிக்க தனது ஆட்சி காலத்தில் இபிஎஸ் பல்வேறு திட்டங்களை செய்தார்.
தற்போது டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தால், அதற்கு வேளாண் துறை அமைச்சர் புள்ளி விவரம் வேறுபாடு உள்ளது என்று கூறுகிறார்.

திமுக தேர்தல் அறிக்கை
திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஏரி, குளங்கள் பாதுகாப்பு சிறப்பு திட்டத்திற்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று கூறினார்கள், ரூ.2,000 கோடியில் 200 தட்டுப்பணைகள் கட்டப்படும் என்று கூறினார்கள். சென்னை நகர் ஆறுகளை பாதுகாப்பிற்கு ரூ.5,000 கோடி ஒதுக்கப்படும் என்று கூறினார்கள். பேச்சுப்பாறை அணை சீரமைக்கப்படும். நொய்யல் ஆறு சீர்படுத்தி, பவானி ஆறு,அமராவதிஆறுகளில் உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க திட்டம் போட்டார்கள். கடலூர் வெள்ள பாதுகாப்புக்கு அரிவாள் மூக்கு வடிகால் திட்டம் அமைக்கப்படும் என்று சொன்னார்கள். இதை எல்லாம் எதுவும் செய்தார்களா?

பட்டுக்கோட்டைக்கு வழி கொட்டப்பாக்கு
விவசாயிகள் நலம் சார்ந்து எடப்பாடியார் கோரிக்கை வைத்தால் அந்த புள்ளி விவரத்தை அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்ய வேண்டும், நீங்களும் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இதே காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேற்றிலே இறங்கி எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து நிவாரணங்கள் வழங்கினார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வருவாய் துறை, வேளாண் துறை ஆகிய துறைகளும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் வேதனை வடிக்கும் கண்ணீருக்கு என்ன வழி என்று கேட்டால், பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டப்பாக்கு என்று பதில் சொல்வது போல அமைச்சர் பதில் உள்ளது.

புதிய விஞ்ஞானி
விவசாயிகளுக்கு வேதனைக்கு விடை கேட்டால் இன்று தருவோம், நாளை தருவோம் என்று கூற வேண்டியது தானே? அதற்கு பதில் அறிக்கையில் எழுத்து பிழை உள்ளது என்று புதிய விஞ்ஞானி போல் கண்டுபிடித்து வேளாண்துறை அமைச்சர் பதில் கூறுகிறார் என்று விமர்சித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications