மதுரை விமான நிலையம் இனி 24 மணிநேரமும் செயல்படும்.. வருகிறது புதிய விமான சேவைகள்.. குட்நியூஸ்
மதுரை: மதுரை விமான நிலையத்தை இனி 24 மணிநேரமும் செயல்பட இந்திய விமான ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. அதுமட்டுமின்றி மதுரை விமான நிலையத்தில் இருந்து இரவு நேரத்தில் உள்நாட்டுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானம் இயக்க தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, மும்பைக்கு விமானங்கள் இயங்கி வருகின்றன. அதேபோல் வெளிநாடுகள் என்று எடுத்து கொண்டால் துபாய், சிங்கப்பூர், இலங்கை தலைநகர் கொழும்புக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த மதுரை விமான நிலையம் என்பது முழுநேரமாக செயல்படுவது இல்லை. காலை 6.55 மணி முதல் இரவு 9.25 மணி வரை மட்டுமே விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. விமான நிலையத்தை வாரத்தில் 7 நாட்களும் 24 மணிநேரமும் செயல்பட வைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை என்பது இருந்து வருகிறது.
அதாவது மதுரை விமான நிலையம் என்பது தென்மாவட்ட மக்களுக்கு முக்கிய விமான நிலையமாக உள்ளது. இதனால் இரவு நேரத்திலும் விமான நிலையத்தை இயங்க அனுமதிக்க வேண்டும் என்று வர்த்தகர்கள் உள்பட பல்வேறு தரப்பில் இந்திய விமான ஆணையத்துக்கு பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்டது. குறிப்பாக விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் நாடாளுமன்றங்களில் இதுதொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தார்.
இந்நிலையில் தான் தற்பாது மதுரை விமான நிலையம் 24X7 என்ற அடிப்படையில் முழுநேரமாக செயல்பட இந்திய விமான ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இதன்மூலம் இனி தினமும் 24 மணிநேரமும் மதுரை விமான நிலையம் செயல்பட உள்ளது. விமான நிலையத்தில் 24 மணிநேர செயல்பாடு என்பது விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. அதாவது இரவு 9.25 மணிக்கு பிறகு மதுரை விமான நிலையத்தில் இருந்து பிற இடங்களுக்கும், பிற நாடுகளுக்கும் விமானங்களை இயக்க பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய விமான ஆணையம் சார்பில் தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது 24 மணிநேரமும் விமான நிலையம் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதன் மூலம் விரைவில் மதுரை விமான நிலையத்துக்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை என்பது அதிகரிக்கும். புதிய இடங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் தங்களின் சேவையை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் மதுரை விமான நிலையத்தை சுற்றிய இடங்களில் வர்த்தகம் அதிகரிக்கும்.
மேலும் தற்போது 24 மணிநேரமும் விமான நிலையம் இயங்க உள்ளது என்பதால் கூடுதலாக பாதுகாப்பு வீரர்கள் தேவைப்படுகிறது. இதனால் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கூடுதலாக மதுரை விமான நிலையத்தில் பணியமர்த்தப்பட வாய்ப்புள்ளது. இதுபற்றி விமான நிலைய தகவல் தொடர்பு பிரிவு சார்பில் கூறுகையில், ‛‛தற்போது 24 மணிநேரமும் மதுரை விமான நிலையத்தில் இருந்து விமானம் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள கட்டமைப்பின்படி புதிய விமான சேவைகளை தொடங்க விமான நிலையங்களுக்கு இது வாய்ப்பாக அமையும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மதுரை விமான நிலையத்தின் இயக்குநர் பி முத்துகுமார் கூறுகையில், ‛‛விமானங்களை இயக்கும் ஆபரேட்டர்களுக்கு இதுபற்றி தெரிவித்துள்ளோம். அவர்கள் இனி இரவு நேரத்தில் விமானங்களை இயக்க முடிவு செய்வார்கள். இந்த அனுமதி மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான விமான சேவைகளின் எண்ணிக்கை என்பது அதிகரிக்கும்.'' என்றார்.
இதுபற்றி விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், ‛‛24 மணிநேரமும் மதுரை விமான நிலையம் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் இருந்து கோலாலம்பூர், மஸ்கட், ஷார்ஜா, சிங்கப்பூருக்கு அதிகமானவர்கள் செல்கின்றனர். இதனால் இந்த இடங்களுக்கு விமானங்களை இயக்க முடியும்'' என்றார்.
இதுபற்றி வேளாண் உணவு வணிகர் சங்க தலைவர் எஸ். ரத்தினவேலு கூறுகையில், ‛‛மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளது. இது வர்த்தகம், தொழில், ஏற்றுமதி, சுற்றுலா, மருத்துவம், சுற்றுலா துறையை வளர்ச்சியடைய செய்யும். அதுமட்டுமின்றி தென்மாவட்டங்களுக்கு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும்'' என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications