அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு எங்கே எப்போது நடைபெறும்.. மதுரை ஆட்சியர் சங்கீதா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதிகளை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தை திருநாள் பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் முதன்முதலாக மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதனை தொடர்ந்து பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

பொங்கல் திருநாளான ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும். இதற்காக விழாக்குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 16ஆம் தேதி பாலமேடு மஞ்சமலை ஆற்று திடல் பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்காக அங்கு வாடிவாசல் அமைக்கப்பட்டு வர்ணங்கள் பூசும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
17ஆம் தேதியன்று உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கோட்டை முனியாண்டி திடலில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மதுரையில் அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மைதானம் கட்டப்பட்டுள்ள நிலையில் நடப்பாண்டு பாரம்பரியமாக நடைபெறும் இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications