வாத்தி கம்மிங்..! மதுரையில் கெத்து காட்டிய அழகிரி ஆதரவாளர்.. டெபாசிட் இழந்த திமுக கூட்டணி - அதிமுக
மதுரை : மதுரை மாநகராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் மகனுமான அழகிரியின் தீவிர ஆதரவாளர் முபாரக் என்பவரின் மனைவி பானு சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் 21மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் , 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது போல மதுரை மாநகராட்சியையும் திமுக தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.

மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி, மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 3 நகராட்சிகள், அ.வல்லாளபட்டி, அலங்காநல்லூர், டி.கல்லுப்பட்டி பாலமேடு உள்ளிட்ட 9 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மதுரை மாநகராட்சியில் கிட்டத்தட்ட 100 வார்டுகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 53.99 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பெரும்பான்மையான திமுக
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே மதுரையில் திமுக முன்னிலை பெற்றது. மதுரை மாநகராட்சி திமுக கைப்பற்றிய நிலையில், சர்ச்சைக்குள்ளான மேலூர் நகராட்சி 8வது வார்டில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. தேர்தல் நடைபெற்ற பூத்தில் பாஜக ஹிஜாப் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் அந்த வார்டில் பாஜக வேட்பாளர் 10 ஓட்டுகளை மற்றும் பெற்று டெபாசிட் இழந்துள்ளார். திமுக வேட்பாளர் முகமது யாசின் 651 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மு.க.அழகிரி ஆதரவாளர்கள்
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சரும், மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி தேர்தலில் நேரடியாக ஆதரவாளர்களை களமிறக்காத நிலையில் சுமார் 40-பேர் அவரது ஆதரவுடன் சுயேச்சைகள் போட்டி விட்டதாக கூறப்படுகிறது. திமுக அதிமுகவுக்கு இணையாக மதுரை மாநகராட்சியில் தீவிர களப்பணியாற்றி வந்த ஆதரவாளர்கள் தற்போது கணிசமான வாக்குகளை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுயேட்சை வேட்பாளர் வெற்றி
இந்த நிலையில் மதுரை மாநகராட்சி 47வது வார்டில் அழகிரியின் தீவிர ஆதரவாளர் முபாரக் என்பவரின் மனைவி பானு சுயேட்சையாக போட்டியிட்டார். இன்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அவர், 4,561 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மேகளா மற்றும் அதிமுக வேட்பாளர் ரூபினி ஆகியோர் டெபாசிட் இழந்தனர். இதையடுத்து திமுக ஆதரவாளர்கள் இந்த வெற்றியை மதுரையில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications