ராத்திரி நேரமாச்சுன்னா.. மதுரை மாடக்குளத்தில்.. அதிர வைக்கும் காட்சிகள்!
Recommended Video
மதுரை: மதுரையில் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்கள் குறித்த பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மதுரை மாடக்குளம் பகுதியில் உள்ள கந்தசாமி சேர்வை நகரைச் சேர்ந்த பாலகுமாரன் என்பவர் நேற்று இரவு பணி முடித்து விட்டு அவருடைய விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார்

இந்த நிலையில் காலையில் எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. அதனை தொடர்ந்து பாலமுருகன் எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.
அப்போது நள்ளிரவு ஒரு மணியளவில் இரண்டு இருசக்கர வாகனங்களில் வரும் மூன்று நபர்கள் பாலகுமாரின் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து மற்றொரு வாகனத்தில் துணையுடன் தள்ளிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் எஸ்.எஸ் காலனி மற்றும் கரிமேடு காவல்நிலையகளில் ஐந்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் திருடு போனது குறிப்பிடத்தக்கது. நள்ளிரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நள்ளிரவு திருடர்களைப் பிடிக்க தற்போது போலீஸார் ஸ்கெட்ச் போட்டு வலை விரித்து தேடி வருகின்றனர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications