Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிய நாடாளுமன்றத்துக்கு ஜனாதிபதியை அழைக்க மறுப்பது 'சனாதனம்'- ஒழித்தே தீருவோம்: உதயநிதி முழக்கம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: நாட்டின் புதிய நாடாளுமன்றத்துக்கு நாட்டின் முதல் குடிமகன், கணவரை இழந்தவர் என்கிற காரணத்துக்காக அழைக்க மறுக்கிற 'சனாதன'த்தை ஒழித்தே தீருவோம் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மதுரை அருகே நேற்று நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அண்ணாவை பற்றி பேசியதற்கு திமுக குரல் கொடுக்கவில்லை என்கிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. ஆனால் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதல் நாளே கண்டனம் தெரிவித்துவிட்டார். சில பேருக்குதான் நாம் கண்டனம் தெரிவிக்க வேண்டும். சில பேரை எல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு போய்க் கொண்டிருக்க வேண்டும்.

BJP Govt insults President; continue to raise voice against Sanatana Dharma: Udhayanidhi Stalin

தலைக்கு ரூ50 கோடி விலை: செப்டம்பர் 2-ந் தேதி சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது. அதில் 10 நிமிடம்தான் பேசினேன். அதை பொய்யாக திரித்து, பொய் செய்தியாகப் பரப்பி, தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் அமித்ஷா வரைக்கும் மோடி வரைக்கும் பொய் செய்தி பற்றி பேசினார்கள். செல்லூர் ராஜூ அவர்களே! ஒரு சாமியார் என் தலைக்கு விலை வைத்தார். எவ்வளவு? உதயநிதி தலையை சீவி கொண்டு வந்தால் ரூ 10 கோடி என அறிவித்தார் அந்த சாமியார். நேற்று திருச்சியில் ஒரு சாமியார், உதயநிதி தலையை சீவிக் கொடுத்தால் ரூ50 கோடி என சொல்லி இருக்கிறார். இதற்கு எல்லாம் பயப்படுவேனா நான்?

சனாதன ஒழிப்புக்காகவே திமுக: திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதே சனாதனத்தை ஒழிக்கத்தான். சனாதனத்தை ஒழிக்கும் வரை போராடித்தான் ஆக வேண்டும். செல்லூர் ராஜூ உட்பட அதிமுகவினர் சனாதனம் குறித்து அண்ணா எழுதியதை, பேசியதை படித்திருக்கிறீர்களா? அண்ணா சனாதனம் குறித்து பேசியதை, எழுதியதை அண்ணா திமுகவினர் பேசுவதற்கு தைரியம் இருக்கிறதா?

அண்ணாவின் சனாதன எதிர்ப்பு முழக்கம்: "சனாதன் சேற்றில் இருந்து நம் மக்கள் இன்னமும் வெளியேறாதது வருத்தம் அளிக்கிறது. இன்னும் சிலர் அந்த சேற்றை சந்தனம் என நினைக்கின்றனர். அதனை நினைத்து வெட்கமும் வேதனையும் படுகிறேன்" என்று அண்ணா சொன்னார். செல்லூர் ராஜூ அவர்களே! இந்த வார்த்தையை சொல்ல உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?

நாடாளுமன்றத்தில் சாமியார்கள்: சனாதனம்னா என்ன? என இப்போது பல பேர் கேட்கின்றனர். சனாதனம் என்பது வேறு ஒன்றுமே இல்லை...புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டது. இந்தியாவின் முதல் பிரதிநிதி யாரு? நம்முடைய ஜனாதிபதி திரவுபதி முர்மு. கடந்த மாதம் புதிய நாடாளுமன்றத்தைத் திறந்தனர். இங்கிருந்து சாமியார்களை தனி விமானத்தில் கூட்டிக் கொண்டு போனார்கள். செங்கோல் எல்லாம் கொண்டு போய் வைத்தனர். அவர்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் என்ன தொடர்பு? நாடாளுமன்றம் என்பது என்ன? மக்கள் பிரதிநிதிகள் போய் மக்கள் பிரச்சனைகளைப் பேசும் இடம்தான் நாடாளுமன்றம். அந்த இடத்துக்கு சாமியார்களை எல்லாம் கூட்டிகிட்டுப் போனார்கள்.

ஜனாதிபதியை அழைக்காத சனாதனம்: ஆனால் ஜனாதிபதி திரவுபதி முர்முவை புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை. ஏன் அழைக்கவில்லை? அவங்க மலைவாழ் மக்கள். அதுமட்டுமல்ல கணவரை இழந்தவர். அதனால் கூப்பிடவில்லை. நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா வருகிறது. அதற்கு இந்தி நடிகை எல்லாம் கூப்பிட்டு போய் இருக்கின்றனர். ஆனால் ஜனாதிபதியை கூப்பிடவில்லை. ஏன்? கணவரை இழந்தவர் என்ற காரணத்தாலேயே ஜனாதிபதியை நாடாளுமன்றத்துக்கு மத்திய பாஜக அரசு அழைக்கவில்லை. இதுதான் சனாதனம். நாம் பிறப்பால் எல்லோரும் சமம் என்கிறோம். இதை மறுக்கிற சனாதனத்தை ஒழிப்போம் என்பதுதான் நமது குரல். இதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+